Pages

Sunday, December 5, 2010

வணங்கும் பொழுது

  1. ஆலயத்திற்கு சென்று இறைவனை தரிசிக்கும் வேளையில் ,அதாவது கோவில் உள்ளே யாருக்கும் கை எடுத்து வணக்கம் சொல்லல் ஆகாது .
  2. ஆலயத்தில் இறவனை நேரடியாக   அதாவது நேருக்கு நேர் நின்று வணங்கி வழிபடுதல் கூடாது .
  3. இறைவனை நோக்கி கை எடுத்து  கரங்களை தலைக்கு மேல் வைத்து வணங்குதல் நலம் .
  4. கால் கழுவும் பொழுது ஒரு கால் மேல் மற்றொரு கால் வைத்து கழுவுதல் கூடாது .
  5. குளிக்கும் பொழுது ஆடையின்றி குளித்தல் ஆகாது .
  6. காலையில் எழுந்தவுடன் அவரவர் கைகளில் விழித்தல் நலம் தரும் .
  7. தாய் தந்தை வாக்கு பலிக்கும் .பெற்றோரிடம் அனுசரணையாக நடுந்து கொள்ளவேண்டும் .
  8. தர்மம் தலை காக்கும் ,வயதானவர்களுக்கு உதவ நலம் பயக்கும் .
  9. தினமும் அதிகாலை எழுந்து குளித்த பின்  வீட்டில் உள்ள கடவுள் படத்தின் முன் அகல்விளக்கு ஒன்றில் தீபம் ஏற்ற வீட்டில் உள்ள பிணி பீடை அகலும் .
  10. 7  1 / 2 சனி நடக்கும்  காலத்தில் உடை ,உடல் ,உள்ளம் தூய்மையாக இருக்க கெடுபலன் குறைந்து நற்பலன் கூடும் . 

No comments:

Post a Comment