Pages

Saturday, April 30, 2011

விடுறா வண்டியை புதுக்கோட்டைக்கு





 எனது நண்பர் ஒருவருக்கு ஏற்பட்ட சுவையான அனுபவத்தின் ஒரு சில நகைச்சுவை பகுதிகளை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன் . தஞ்சாவூரில்  வசித்துகொண்டிருக்கும் நமது நண்பர் ஆங்கிலம் கற்பிப்பதில் மிகுந்த புலமை மிக்கவர் , சரளமாக ஆங்கிலம் பேசக்குடியவர் ,மேலும் நண்பர் மக்கள் பணியில் மிகுந்த அக்கறை  மிக்கவர். குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால் அடிக்கடி பொது நிகழ்சிகளில் தலைமை ஏற்கக் குடியவர் . பண்புள்ளம் கொண்டவர்.நண்பர்
நல்ல உயரம் அதேபோல் கொஞ்சம் குண்டானவர் ( தொப்பை) உள்ளவர் .நண்பருக்கு சின்ன கெட்ட பழக்கம் உண்டு. 5
நிமிடம் தனிமையிலோ அல்லது யாருடனும் பேசாமல் இருந்தால் உடனே
உட்கார்ந்தபடியே தூங்கிவிடுவார்.

நண்பருக்கு திருச்சியில் உள்ள  ஒரு தனியார் ஆங்கில பள்ளி ஆண்டு விழாவிற்கு தலைமை ஏற்க அழைப்பு  வந்தது. பள்ளியின்  தாளாளர் யாரேன்று கேட்டால் காவல் துறையில் dsp
ஆக இருந்து ஓய்வு பெற்றவர் . நண்பரும்  அழைப்பை ஏற்று தனது நண்பரை அழைத்துக்கொண்டு திருச்சிக்கு பயணம் செய்தார் தனது பைக்கில் .நண்பர் சிறப்பு விருந்தினர் என்பதால் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை அணிந்து சென்றார் .( புது மாப்பிள்ளை போல் )

கீரனூர் வந்ததும்  ஹோட்டல் இல் எதாவது சாப்பிடுவோம் என இருவரும் பைக் ஐ நிப்பாட்டி சாப்பிட்டனர் . சாப்பிட்ட பின் வெற்றிலை பாக்கு போடுவோம் என நண்பரும் அவருடைய சக நண்பரும் முடிவு செய்தனர். வெற்றிலை  மற்றும்  பான்பராக்கும் சேர்த்து வாங்கியவர்  வெற்றிலையின் பின்னால்  
சுண்ணாம்பையும் தடவி  வைத்தார் .


பான்பராக் உடன் வெற்றிலை போட்டால் சுண்ணாம்பு தேவை இல்லை .கூடுதலாக சுண்ணாம்பு தடவினால் வாய் வெந்து விடும் நண்பரோ இது தெரியாமல் பான்பராக் உடன் தேவைக்கு அதிகமான சுண்ணாம்பையும் தடவி வாயில் தள்ளி சுவைக்க இரண்டு நிமிடம் தான் தாமதம் வாயெல்லாம் உரைக்க . உடன் வந்த நண்பரிடம் வாய் எல்லாம்
உரைக்குதே என்று கத்த சிக்கிரம் துப்புங்க தலைவரே வாயை கழுவலாம்  என சொல்ல நண்பர் வாயில் உள்ள வெற்றிலை பாக்கை இத் த்து  என  துப்ப நண்பருக்கு தொப்பை இருப்பதால் குனிந்து துப்ப வேண்டும் மாறாக நின்றபடியே துப்ப வெள்ளை வேட்டி சட்டை எல்லாம் ரத்தகரை போல்  ஆகிவிட்டது . இப்படி இந்த கோலத்துடன் நண்பர் திருச்சி 
சென்று பள்ளி நிகழ்ச்சியில் தலைமை ஏற்க முடியுமா ?


சட்டையை கழுவி விடலாம் என்றால் சனியன் பிடித்த கரை விட மாட்டேன் 
என்கிறது . 


வேண்டாம் விடுப்பா திருச்சி போனதும் புது சட்டை வாங்கி கொள்வோம் என இருவரும் திருச்சி
 நோக்கி பைக் ல் புறப்பட்டனர்.


திருச்சி போனதும் புதிய வேட்டி ஒன்றும், சட்டை இருப்பதிலே பெரிய சைஸ் எதுவோ அதை தேடி கண்டு பிடித்து  சட்டையை கடையில் போட்டு பார்க்காமல் நண்பர் வாங்கினார்.


உடன் வந்த நண்பர் ஊருக்குள்ள கொஞ்சம் அவுட்டர் போயி மூஞ்சி முகம் எல்லாம் கழுவலாம் 10  தண்ணீர் பாக்கெட் சோப்பும் வாங்கு என நண்பரிடம் சொல்ல அதே போல் நண்பரும் 
வாங்க .நல்ல ஒதுக்கு புறமான இடமாக பார்த்து நிப்பாட்டி .மூஞ்சி முகம் எல்லாம் கழுவி புதிய வேட்டியை எடுத்து கட்டி பின்னர் .

கரை பட்ட சட்டையை கோபமாக அருகில் இருந்த முள்ளில் வீசி அதன் பின்னர் 
கையில் இருந்த புது சட்டையை எடுத்து மாட்ட முயற்சி செய்தார், சட்டையில் உள்ள முதல் மூன்று பட்டன் 
மட்டும் தான் மாட்ட வந்தது மீதம் உள்ள மூன்று பட்டன் களையும்  மாட்ட
முடியவில்லை எனேன்றால் நண்பருக்கு தொப்பை இருப்பதால் மாட்ட முடியவில்லை, உடன் வந்த சக நண்பரிடம் நண்பா முச்சை இழுத்து பிடித்து கொள்கிறேன் எப்புடி யாவது பட்டன் ஐ போட்டு விட்டுடு என கெஞ்ச உடன் வந்த நண்பரும் எப்புடியாவது பட்டன் மாட்டிவிடலாம்
என முயற்சி செய்ய எவ்வளவோ முயற்சி செய்தும் சட்டையை போட
முடியாமல் திணறி .போடமுடியாது என கூறி அசந்து  விட்டார்.


  தலைவரே  பேசாமல் அந்த சட்டையை சோப்பு போட்டு துவைத்து விடலாம் என இருவரும் முயற்சி செய்ய , அருகில் இருந்த வீட்டில்
நிலைமையை விளக்கி . முள்ளில் வேண்டாம் என வீசிய சட்டையை எடுத்து துவைத்து சட்டையை இரமாக இருக்கும் பொழுதே சட்டையை
மாற்றி தான் தலைமை தாங்க வேண்டிய பள்ளியை நோக்கி பைக் புறப்பட்டது .

பள்ளிக்கு சென்ற நண்பருக்கு அமோக வரவேற்பு , ஆனால் நண்பருக்கு சட்டை இரமாக இருப்பதால் un easy
யாக இருப்பதாக உணர்வு.
நண்பர் சென்று பதினைந்து நிமிடத்தில் முதல் பாடல் ஆரம்பம் ஆனது
நான்கு பாடல் முடிந்த பின்னர் தான் ,சிறப்பு விருந்தினர் மேடை ஏறவேண்டும். அதற்காக நண்பர்   காத்திருக்க ,காத்திருந்த வேளையில்
கண்  அயர்ந்து விட்டார்.  

மேடையில் ஏதோ ஒரு பெண் நாட்டியம் ஆட சிறப்பு விருத்தினர் ஆக
வந்த நமது நண்பரோ குறட்டை விட்டு தூங்க, பள்ளியின் தாளார் சங்கடப்பட நண்பருடன்  வந்த மற்றொரு நண்பர் நிலைமையை புரிந்து தலைவரே எழுந்திரிங்க வாங்க கொஞ்சம் நடப்போம் என கூப்பிட,

பாத் ரூம் செல்வது போல் பாசாங்கு காட்டி கண் இமைக்கும் நேரத்தில்
இருவரும் பைக்கில் புறப்பட்டு பள்ளி வளாகத்தை விட்டு வெளியில் செல்ல ,அங்கு புறப்பட்ட வண்டி திருச்சி ஏர்போர்ட் இல் தான் நின்றது ,
எனேன்றால் நண்பரின் செல் போன் சிணுங்க நம்பர் ஐ பார்த்தால் பள்ளி  தாளாளரின் நம்பர். நண்பர் செல் போன் ஐ தொட வில்லை . மாறாக (நாட்டமை படத்தில் vijayakumar சொல்வது போல் )  விடுறா வண்டியை புதுகோட்டை க்கு என்றார் நண்பர் .  பள்ளியில் சிறப்பு விருந்தினர் மேடைக்கு அழைக்கப்படுகிறார் என speaker பாக்ஸ் அலறியது .

Monday, April 25, 2011

வரமா ?

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். அது உண்மையில் வரமா ? இல்லை  சாபமா ?அப்புடின்னு பார்க்கலாமா .1998  ஆம் வருடம் ,எனக்கு  {இப்புடி வருசமெல்லாம் சொல்லி ஆரம்பிகின்றேனே ஏதோ முக்கியமான வரலாற்று சம்பவத்தை தான் சொல்லே போறேன்னு நீங்க நினைக்கலாம் }எyனக்குஎனக்கு எனக்கு ny25 வயது  இருக்கும்   பொழுது பெண் பார்க்கும் படலம் ஆரம்பம் ஆனது.{ கழுதை தேஞ்சு கட்டேரும்பு  ஆன கதை அப்புடின்னு மக்கள் பேசுறதை நீங்க பார்க்கலாம் அது என்னங்க அதற்க்கு விளக்கம் கதையை நல்ல கவனிங்க }


வத்தலகுண்டு ல் இருந்து ஒரு பெண்ணின் ஜாதகம் வந்தது . முதன் முதலாக பெண் பார்க்க போகிறோம் என ஆயிரம் கனவுகளோடு வத்தல
குண்டிற்கு செல்ல வாடகை டாட்டா சுமோ ஏற்பாடு செய்தேன் .

பெண்ணோட ஊருக்கு{வத்தலகுண்டு)  போன பின்னாடி தான் தெரிஞ்சது நான் குண்டு அந்த பொண்ணு வத்தல் அப்புடின்னு  தெரிந்தது. கருப்பான பொண்ணு வேணாம் அப்புடின்னு ரொம்ப கோபமா வாடகை டாட்டா சுமோ வில் புறப்பட்டு புதுக்கோட்டை வந்தோம் . (என்னடா இவன் அடிக்கடி சுமோ சுமோ அப்புடின்னு சொல்லறன்னு நீங்க நினைக்கலாம் அது தானே சாமி கதையோட கரு }


அடுத்தபடியாக புதுகோட்டை அருகில் உள்ள முள்ளூர் ல் இருந்து ஒரு ஜாதகம் வந்தது  .ஜாதகம் பார்த்தோம் பொருத்தம்  இருந்தது . சரி போய் பொன்னை பார்போம் என மீண்டும் வாடகை டாட்டா சுமோ ஏற்பாடு செய்தேன் .


முள்ளூர் சென்று பெண் பார்த்தோம் ,பெண்ணை பார்பதற்கு முன்னால் இந்த பெண் ஜாதகத்தை கொடுத்த நபரை அடித்து விடலாமா என்ற  சிந்தனை பெண் வீட்டில் உட்கார்ந்து இருந்த பொழுது தோன்றியது .காரணம் என்ன என்றால் அந்த வீட்டில் இருந்தவர்கள் எல்லாம்  சுத்த பட்டிகாட்டு ஜனங்களா இருக்கின்ற மாதிரி  உணர்வு என் உள்ளே ஏற்பட்டது . பொண்ணு அசிங்கமா இருக்குமோ அப்புடின்னு நினைத்தால் அதற்க்கு நேர்மாறாக பொண்ணு சூப்பர் ஆக இருந்தது.


என்ன  தான் பொண்ணு சூப்பர் ஆக இருந்தாலும் பொண்ணுக்கு என்னை பிடிக்கணும் இல்லிங்களா , பாவம் பொண்ணு 
அழுதுகிட்டே இருந்துச்சு  {அந்த பொண்ணு மனசுல என்ன இருக்குன்னு யாருக்கு தெரியும் }


அடுத்தபடியா புதுக்கோட்டை  மச்சுவாடி ல்  இருந்து ஒரு பெண் ஜாதகம் வந்தது. 

மச்சுவாடி நோக்கி அந்த பொன்னை பார்க்க ஆட்டோ  வில் புறப்பட்டோம் . பொண்ணு நல்லா இல்லாததால் வேண்டாம் என தீர்மானித்தோம்.


6  மாத காலத்திற்கு பின்னர் திருச்சி ல் பெண் இருப்பதாக சொல்ல பஸ்சில்  சென்று பெண் பார்த்தேன் .நல்வேளை.  நடந்து சென்று பெண் பார்க்க வேண்டிய படலம் இல்லாமல் தப்பித்தேன்.

சுனாமி

ஒரு அவசர வேலை காரணமாக நானும் அண்ணனும் சென்னை சென்று இருந்தோம் .அண்ணன் அவர்களின்  பெயரை சொல்ல  விட்டாலும் ,அவரை பற்றி ஒரு சில செய்திகளை சொன்னால் மட்டுமே கதை சுவாரசியமாக இருக்கும் . எப்பொழுதும் மிகவும் சுத்தமாக இருக்க நினைப்பவர் அண்ணன், சென்னைக்கு செல்லும் பொழுது நண்பரின் காரில் வந்தோம் புறப்படும் பொழுது ,பஸ்சில் வராமல் ட்ரெயினில் புறப்பட நினைத்தோம். என்னுடைய கையில் ஒரு traveL  bag  இருந்தது ,அதே போல் அண்ணன் கையில் ஒரு சூட் கேஸ் இருந்தது .சூட்  கேஸ் மேல் உரை போட பட்டு இருந்தது. டிக்கெட் புக் செய்யாததால் . un reserved  ticket எடுத்தோம்.

train புறப்படும் நேரம் ட்ரெயின் வரும் இடத்தில் நானும்  அண்ணனும்,unreserved
compartment  நோக்கி சென்றோம். மிக வேகமாக வந்து நின்றது பல்லவன் எக்ஸ்பிரஸ் ,சரியான கூட்டம்,நிச்சயம் train உள்ளே ஏறுவது கடினம் என என்னுடைய மனசாட்சி சொல்லியது, என்ன செய்வது முயற்சி செய்வோம்.
என கூட்ட நெரிசலில் train உள்ளே ஏற காலடிஎடுத்து வைத்தோம்  சுனாமி வந்தால் எப்படி மக்கள் தலை
 தெறிக்க ஒடுவார்களோ அதே போல் train  உள்ளே மக்கள் ஓட  அண்ணனின் கையில் இருந்த  suitcase  திடீரென  ட்ரைன் உள்ளே போய் விழுந்தது ,suitcase  உள்ளே போன அவசரத்தில்,அண்ணனும் கஷ்டப்பட்டு உள்ளே செல்ல காலை எடுத்து train உள்ளே வைக்க, கூட்டம் சத்தம் இன்றி
அண்ணனை உள்ளே தள்ளியது .ஆகா அண்ணன் உள்ள போய்ட்டார் அப்புடின்னு நானும் கஷ்டப்பட்டு உள்ளே ஏற ,பிழைத்தால் போதுமென
கிடைத்த இடத்தில் அமர்ந்து அண்ணனுக்கு போன் செய்து என்னுடைய
இடத்தில் அருகில் அமர அழைத்தேன் .நான் ஏற்கனவே உங்களிடம் குறிப்பிட்டு
இருந்தேன் அண்ணன் ரொம்ப சுத்தம் பார்க்கிறவர் என்று . .அண்ணனை   பார்கிறேன்
பார்த்தால் அவருடைய சட்டை பட்டன் இரண்டை காணவில்லை .அண்ணே என்ன ஆச்சு என கேட்க கூட்டத்தில் பட்டன் அறுந்து போச்சு என்றார் .அண்ணே உங்க suitcase ஐ
கொடுங்க மேலே வைக்கலாம் என கேட்டேன் ,suitcase

ஐ வாங்கி பார்த்தால் suitcase  கவர் இல்லை எங்கே  என்றேன் .யாருக்கு தெரியும் நல்லவேளை suitcase  ஆவது இருந்ததே என்றார் . பாவம் அண்ணனை  கூட்டம் அசுத்த படுத்தி  விட்டது .

Sunday, April 24, 2011

அன்பு



 


சில வருடங்களுக்கு முன்பு, வெலிங்டனில் உள்ள ராணுவ அதிகாரி ஒருவரின் வீட்டுக்குச் சென்று இருந்தேன். அவரது வரவேற்பறையில் இரண்டு கைகளின் புகைப்படம். யாரோ ஒரு புனிதரின் கைகளாக இருக்கக்கூடும் என்று நினைத்து, அதைப்பற்றிக் கேட்கவே இல்லை. அவரோடு காரில் பயணம் செய்யும்போது, அதேபோன்ற கைகளின் புகைப்படத்தை மறுபடியும் பார்த்தேன். ஆவலில் அது யாருடைய கைகள் என்று கேட்டேன்.






அவர் புகைப்படத்தைக் கையில் எடுத்துப் பார்க்கும்படியாகச் சொன்னார். புகைப்படத்தை அருகில் தொட்டுப் பார்த்தபோது, அது வயதான ஒரு பெண்ணின் கைகள் என்பதைக் கண்டுகொண்டேன். முதுமையின் ரேகை படிந்த நீண்ட விரல்கள். நகங்கள் சுத்தமாக வெட்டப்பட்டு இருக்கின்றன. நரம்புகள் புடைத்துத் தெரிகின்றன. யாராக இருக்கும் என்று மனது ஏதேதோ துறவிகளை, ஞானிகளை நினைவுபடுத்திக்கொண்டே இருந்தது.


அவர் அந்தக் கைகளைப் பெருமூச்சுடன் பார்த்து ஆதங்கமான குரலில் அது என் அம்மாவின் கைகள் என்று சொன்னார். ஆச்சர்யமாக இருந்தது. "எதற்காக அம்மாவின் கைகளை மட்டும் புகைப்படமாக வைத்திருக்கிறீர்கள்?" என்று கேட்டேன்.





"அந்தக் கைகள்தான் என்னை வளர்த்தன. என் நினைவில் எப்போதுமே அம்மாவின் கைகள்தான் இருக்கின்றன. அம்மாவின் முகத்தைவிட, அந்தக் கைகளைக் காணும்போதுதான் நான் அதிகம் நெகிழ்ந்துபோகிறேன்.


அம்மா இறப்பதற்குச் சில மணி நேரம் முன்பாக இந்தப் புகைப்படத்தை எடுத்தேன். இந்தக் கைகள் இப்போது உலகில் இல்லை. ஆனால், இதே கை களால் வளர்க்கப்பட்டவன் உங்கள் முன்னால் உட்கார்ந்திருக்கிறேன்.


என் அம்மா எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து ஓய்வு எடுத்ததே இல்லை.


அப்பா பொறுப்பற்ற முறையில், குடித்து, குடும்ப வருமானத்தை அழித்து 32 வயதில் செத்துப் போனார்.அம்மாதான் எங்களை வளர்த்தார். நாங்கள் மூன்று பிள்ளைகள். அம்மா படிக்காதவர். ஒரு டாக்டரின் வீட்டில் பணிப் பெண்ணாக வேலைக்குச் சேர்ந்தார். பகல் முழுவதும் அவர்கள் வீட்டினைச் சுத்தம் செய்வது, பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது, நாய்களைப் பராமரிப்பதுபோன்ற வேலைகள். மாலையில் இன்னும் இரண்டு வீடுகள். அங்கும் அதேபோல் சுத்தம் செய்யும் வேலைதான்.






எத்தனை ஆயிரம் பாத்திரங்களை அம்மாவின் கைகள் விளக்கிச் சுத்தம் செய்து இருக்கும் என்று நினைத்துப்பார்க்கவே மனது கஷ்டமாக இருக்கிறது.


இரவு வீடு திரும்பிய பிறகு, சமைத்து எங்களைச் சாப்பிடவைத்து உறங்கச்செய்துவிட்டு அதன் பின்னும் அம்மா இருட்டிலேயே கிணற்றில் தண்ணீர் இறைத்துக்கொண்டு இருப்பார்கள். சமையல் அறையில்தான் உறக்கம்.


அப்போதும் கைகள் அசைந்தபடியேதான் இருக்கும். எங்கள் மூவரையும் பள்ளிக் கூடம் அழைத்துப் போகையில் யார் அம்மாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு நடப்பது என்பதில் போட்டியே இருக்கும்.


அந்தக் கைகளைப் பிடித்துக்கொள்வதில் அப்படி ஒரு நெருக்கம், நம்பிக்கை கிடைக்கும். அதுபோலவே உடல் நலம் இல்லாத நாட்களில் அம்மாவின் கைகள் மாறி மாறி நெற்றியைத் தடவியபடியே இருக்கும். அம்மா நிதானமாகச் சாப்பிட்டு நான் பார்த்ததே இல்லை.


தனது சகலச் சிரமங்களையும் அம்மா தன் கைகளின் வழியே முறியடித்து எங்களை வளர்த்தபடியே இருந்தார். மருத்துவரின் வீட்டில் அம்மா ஒருநாள் ஊறுகாய் ஜாடியை உடைத்துவிட்டார் என்று அடி வாங்குவதைப் பார்த்தேன். அம்மாவின் கன்னத்தில் மருத்துவரின் மனைவி மாறி மாறி அறைந்துகொண்டு இருந்தார். அம்மா அழவே இல்லை.


ஆனால், நாங்கள் பார்த்துக்கொண்டு இருப்பதைத் தாங்க முடியாமல், விடுவிடுவென எங்களை இழுத்துக்கொண்டு அந்த வீட்டில் இருந்து வெளியேறினாள். வழியில் பேசவே இல்லை. அம்மாவை எந்தக் கைகளும் ஆறுதல்படுத்தவோ, அணைத்துக்கொள்ளவோ இல்லை. அவள் கடவுள் மீதுகூட அதிக நம்பிக்கைகொண்டு இருந்தாள் என்று தோன்றவில்லை. வீட்டில் சாமி கும்பிடவோ, கோயிலுக்குப் போய் வழிபடவோ, அதிக ஈடுபாடு காட்டியதே இல்லை. வேலை... வேலை... அது மட்டுமே தன் பிள்ளைகளை முன்னேற்றும் என்று அலுப்பின்றி இயங்கிக்கொண்டு இருந்தார்.


சிறு வயதில் அந்தக் கைகளின் முக்கியத்துவத்தை நான் புரிந்துகொள்ளவே இல்லை.


ஆசையாகச் சமைத்துத் தந்த உணவைப் பிடிக்கவில்லை என்று தூக்கி வீசி இருக்கிறேன். கஷ்டப்பட்டுப் பள்ளியில் இடம் வாங்கித் தந்தபோது படிக்கப் பிடிக்கவில்லை என்று போகாமல் இருந்திருக்கிறேன். கைச் செலவுக்குத் தந்த காசு போதவில்லை என்று அம்மாவுக்குத் தெரியாமல் வீட்டில் திருடி இருக்கிறேன். மற்ற சிறுவர்களைப்போல சைக்கிள் வாங்கித் தர மாட்டேன் என்கிறாள் என்று கடுமையான வசைகளால் திட்டிஇருக்கிறேன். அம்மா எதற்கும் கோபித்துக்கொண்டதே இல்லை.அம்மா கஷ்டப்படுகிறாள் என்று தெரிந்தபோதும் யார் அவளை இப்படிக் கஷ்டப்படச் சொன்னது என்றுதான் அந்த நாளில் தோன்றியது. கல்லூரி வயதில் நண்பர்களோடு சேர்ந்து சுற்றவும், புதுப் புது ஆடைகள் வாங்கவும் குடிக்கவும் எத்தனையோ பொய்கள் சொல்லி இருக்கிறேன். என் அண்ணனும் தங்கையும்கூட இப்படித்தான் செய்திருக்கிறார்கள். ஆனால், அம்மா அதற்காக எவரையும் கோபித்துக்கொள்ளவே இல்லை.


கல்லூரி இறுதி ஆண்டில் மஞ்சள் காமாலை வந்து, நோயாளியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் அம்மா. அப்போதுதான் அவர் எங்களை எவ்வளவு அக்கறையோடு, ஆதரவோடு காப்பாற்றி வந்திருக்கிறார் என்று புரிந்தது. அதன் பிறகு, என்னைத் திருத்திக்கொண்டு தீவிரமாகப் படிக்கத் துவங்கி, ராணுவத்தில் வேலைக்குச் சேர்ந்து கடுமையாக உழைத்துப் பதவி உயர்வுபெற்றேன். அம்மாவை என்னுடனே வைத்துக்கொண்டேன். நான் சம்பாதிக்கத் துவங்கியபோதும், அம்மா ஒருபோதும் எதையும் என்னிடம் கேட்டதே இல்லை. நானாக அவருக்கு எதையாவது வாங்கித் தர வேண்டும் என்று நினைத்து, தங்க வளையல் வாங்கித் தருகிறேன் என்று அழைத்துப் போனேன்.


முதிய வயதில் அம்மா மிகுந்த கூச்சத்துடன், 'எனக்கு ஒரே ஒரு வாட்ச் வேண்டும். சின்ன வயதில் வாட்ச் கட்டிக்கொண்டு வேலைக்குப் போக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், அது நடக்கவே இல்லை. அதன் பிறகு, எனக்குள் இருந்த கடிகாரம் ஓடு... ஓடு... என்று என்னை விரட்டத் துவங்கியது. அலாரம் இல்லாமலே எழுந்துகொள்ளப் பழகிவிட்டேன். இப்போது வயதாகிவிட்டது. சில நாட்கள் என்னை அறியாமல் ஆறு மணி வரை உறங்கிவிடுகிறேன். இரவு உணவை ஏழு மணிக்குச் சாப்பிட்டுவிடுகிறேன். ஒரு வாட்ச் வாங்கித் தருவாயா?' என்று கேட்டார்.


அம்மா விரும்பியபடி ஒரு வாட்ச் வாங்கித் தந்தேன். ஒரு பள்ளிச் சிறுமியைப்போல அதை ஆசையாக அம்மா எல்லோரிடமும் காட்டினாள். அதை அணிந்துகொள்வதில் அம்மா காட்டிய ஆர்வம் என்னை நெகிழ்வூட்டியது. அதன் பிறகு அம்மா, நான் திருமணம் செய்து டெல்லி, பெங்களூரு என்று வேலையாக அலைந்தபோது கூடவே இருந்தார். டெல்லியில் எதிர்பாராத நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். நான் கூடவே இருந்தேன்.






'நாங்கள் ஏமாற்றியபோது எல்லாம் ஏன் அம்மா எங்களை ஒரு வார்த்தைகூடத் திட்டவே இல்லை?' என்று கேட்டேன்.


அம்மா, 'அதற்காக நான் எவ்வளவு அழுதிருக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியாது. ஆனால், அன்று நான் கோபப்பட்டு இருந்தால், என் பிள்ளைகள் என்னைவிட்டுப் போயிருப்பார்கள்' என்று சொல்லி, தன் கையை என்னுடன் சேர்த்துவைத்துக்கொண்டார்.


அப்போதுதான் அந்த முதிய கைகளைப் பார்த்தேன். அது எவ்வளவு உழைத்திருக்கிறது. எவ்வளவு தூய்மைப்படுத்தி இருக்கிறது. எவ்வளவு அன்பைப் பகிர்ந்து தந்திருக்கிறது. அதை ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது. பிறகு ஒருநாள், எனது கேமராவை எடுத்து வந்து, புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.


இன்று அம்மா என்னோடு இல்லை. ஆனால், இந்தக் கைகள் என்னை வழி நடத்துகின்றன. ஒவ்வொரு நாளும் நான் எப்படி வளர்க்கப்பட்டேன் என்பதை இந்தக் கைகள் நினைவுபடுத்துகின்றன. இதை வணங்குவதைத் தவிர, வேறு நான் என்ன செய்துவிட முடியும்?" என்றார்.


ராணுவ அதிகாரியினுடைய முகம் தெரியாத அந்தத் தாயின் கைகளை நானும் தொட்டு வணங்கினேன். அந்தக் கைகள் யாரோ ஒருவரின் தாயின் கைகள் மட்டும் இல்லை.


உலகெங்கும் உழைத்து ஓய்ந்துபோன தாயின் கைகள் யாவும் ஒன்றுபோலத்தான் இருக்கின்றன. அவை எதையும் யாசிக்கவில்லை. அணைத்துக்கொள்ளவும், ஆதரவு தரவும், அன்பு காட்டவுமே நீளுகின்றன. அதை நாம் புறந்தள்ளிப் போயிருக்கிறோம். அலட்சியமாகத் தவிர்த்து இருக்கிறோம்.


இலக்கு இல்லாத எனது பயணத்தில் யார் யார் வீடுகளிலோ தங்கியிருக்கிறேன். சாப்பிட்டு இருக்கி றேன். எனது உடைகளைத் துவைத்து வாங்கி அணிந்து இருக்கிறேன். அந்தக் கைகளுக்கு நான் என்ன நன்றி செய்து இருக்கிறேன். ஒரு நிமிடம் என் மனம் அத்தனை கைகளையும் வணங்கி, தீராத நன்றி சொன்னது.






'கை விரல்களுக்கு இடையில் இடைவெளி இருப்பது இன்னொரு கைகள் நம்மோடு சேர்ந்துகொள்ளத்தான்' என்று எங்கோ படித்தேன். அதை நிறைய நேரங்களில் நாம் உணர்வதே இல்லை. நம் மீது அன்பு காட்டும் கைகளுக்கு நாம் என்ன செய்யப்போகிறோம்? முடிவு நம்மிடமே இருக்கிறது!

Monday, April 11, 2011

கோபத்தை குறைக்க சில வழிகள் :




1. கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பை கைவிடுங்கள். மற்றவர்களையும் அன்போடு பாருங்கள். நிதானமாக கோபமூட்டிய நபரின் சூழ்நிலையை சிந்தியுங்கள்.

2. கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்த்திடுங்கள். உடனே உங்கள் மனதை வேறு விசயத்தில் திருப்புங்கள்.

3. அவசரம் ஒருபோதும் வேண்டாம். பொறுமையாக இருங்கள்
4. நேரம் மேம்பாடு மற்றும் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள்.

5. செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும், குழப்பம் இல்லாமலும் செய்யுங்கள்.

6. கோபம் வருகிற சூழ்நிலைகளில் அதிகம் பேசாதீர்கள். மெளனமாக இருங்கள்
7. நமது கெளரவம் பாதிக்கப்பட்டதை மறந்து மற்றவர்களை விட நமக்கு இறைவன் அளித்த வாய்ப்புகளை நினைத்து இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

8. எவ்வளவு கோபம் ஏற்படுகிறதோ, அதைப் பொறுத்து 1 முதல் 100 வரையிலான எண்களை எண்ணிடுங்கள்.

9. சில நிமிடத்திற்கு உங்களது சூழ்நிலையை மாற்றுங்கள். அமர்ந்திருந்தால் எழுந்து நடங்கள். நடந்து கொண்டிருந்தால் சற்று நின்று கொள்ளுங்கள்.

10. கோபம் வருகிறது என்று தெரிந்ததும், ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.
11. முகத்தை கழுவுங்கள். அல்லது ஒரு சுகமான குளியல் போடுங்கள்.நீண்ட நாள் சந்தோசமாக வாழ வேண்டுமானால் நிச்சயம் நாம் கோபத்தை குறைத்தாக வேண்டும்.





நன்றி

இடுகையிட்டது kudumiyanmalai ravichandran

Saturday, April 9, 2011

புகைப்படக்கலை


 கலைகளில் மிக சிறந்த  கலை புகைப்படக்கலை என்றுதான் சொல்ல வேண்டும் 
நமது கையில் சொந்தமாக ஒரு கேமரா இருந்து விட்டால், ,நாமும் இயற்கையை ரசிக்க ஆரம்பித்து விடுவோம் . சாதாரணமாக  பொண்ணு பார்க்க வேண்டுமானால், உடனே நாம் பொண்ணு வீட்டிற்க்கு சென்று பார்ப்பது கிடையாது. பொண்ணோட போட்டோவை குடுத்து அனுப்புங்க என்று தான் சொல்லுவோம் .பொண்ணை போட்டோவுல   பார்த்து பொண்ணு நல்ல இருந்தா தான், பெண் பார்க்கும் படலம் ஆரம்பம் ஆகும் .சிலர் நேரில் பார்க்கும் பொழுது நல்லா இருப்பாங்க ஆனால் போட்டோவில் பார்க்கும் பொழுது சுமாராக  இருப்பாங்க. இதற்கு என்ன காரணம் அப்புடின்னு பார்த்தால்
 ,புகை படம் எடுக்கும் போட்டோ கிராபர் கையில் தான் உள்ளது .எனக்கு தெரிந்த வரையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு சிறந்த  போட்டோ
 மற்றும் வீடியோ கிராபர் யார் என என்னிடம் நீங்கள்  கேட்டால் ,புதுக்கோட்டை ABC PHOTOS  மற்றும் VIDEO  
COVERAGE  உரிமையாளர் M .கோபிக்கண்ணன் அவர்கள் .அவர்   பாரதிதாசன் பல்கலை கழகத்தில் ஒளிப்பவதிவாளருக்குரிய சான்றிதல் பெற்றவர் .அதற்கும் மேலாக 
புதுக்கோட்டையில் பெயர் சொல்லக்கூடிய பிரபலமான ஸ்டுடியோக்களில்
இவரது பணியும் மேலானது .முதன் முதலாக புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான   விருது JUNIOR  CHAMBER   இவருக்கு    வழங்கியது . விருதை பெரும் பொழுது இவர் ஒரு நிறுவனத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார் .தற்பொழுது விருதுகள் வழங்கப்படவில்லை வாங்கப்படுகின்றன .  


ABC PHOTOS AND VIDEOS
CONTACT NUMBER ;93454 06788,  9442406789