Pages

Sunday, October 23, 2011

நீங்களும் பணக்காரர் ஆகலாம் தீபாவளி அன்று !

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

பொதுவாக தீபாவளி அன்று பாரம்பரிய உடைகளை அணியவே பெரும்பாலான தென்னிந்திய மக்கள் விரும்புகின்றனர். அன்று அநேக பெண்கள் புடவையும் (குறிப்பாக பட்டுப்புடவை) ஆண்கள் வேட்டியும் உடுப்பர். தீபாவளி அன்று ஒவ்வொரு இல்லத்திலும் மங்கள இசையான நாதசுவரம் ஒலிக்கும். அன்று இனிப்புக்கள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர். பரிசுகள் தந்து மகிழ்வர். பெரியோரை வணங்கி வாழ்த்து பெறுவர். தீபாவளி இலேகியம் (செரிமானத்திற்கு உகந்தது) அருந்துவதும் மரபு.




தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்வதற்கு காரணம், அன்றைய தினம், அதிகாலையில் எல்லா இடங்களிலும், தண்ணீரில் கங்கையும், எண்ணெயில் லட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும், குங்குமத்தில் கௌரியும், சந்தனத்தில் பூமாதேவியும், புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக கருதப்படுவதேயாகும். அந்த நீராடலைத்தான் "கங்கா ஸ்நானம் ஆச்சா" என்று ஒருவருக்கொருவர் விசாரிப்பர். அன்றைய தினம், எல்லா நதிகள், ஏரிகள், குளங்கள், கிணறுகளிலும், நீர்நிலைகளும் "கங்கா தேவி" வியாபித்து இருப்பதாக ஐதீகம். அடிப்படையில் இந்துப் பண்டிகையாய் இருந்தாலும், சாதி மத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாய் கொண்டாடும் பண்டிகை தீபாவளி.

தீபாவளி அன்று புதிய அழுக்கு அடையாத ரூபாய் நோட்டுக்களை  அதாவது புதிய ரூபாய் நோட்டுக்களை  ஒரு வெள்ளை துணியில் மடிக்காமல் பூஜை அறையில்
 வைத்து கடவுளிடம் வேண்டி அதன் பின்னர் பீரோ வில் வைத்தால் 
சகல ஐஸ்வர்யமும்  பெறலாம் . நீங்கள் ஏழையா ,நீங்களும் பணக்காரர்  ஆகலாம்   .தீபாவளி அன்று

Thursday, October 6, 2011

கார்த்திக் தொண்டைமான்

புதுக்கோட்டை சமஸ்த்தானத்தின் கடைசி மன்னராகவும் புதுக்கோட்டை தொண்டைமான் பரம்பரையின் 9 ஆவது மன்னராகவும் விளங்கியவர் ஸ்ரீ  பிரகதாம்பாள் தாஸ்  ராஜகோபாலத் தொண்டைமான். இம்மன்னரின் காலத்தில் தான் திருச்சிராப்பள்ளியிலிருந்து புதுக்கோட்டை வழியாக மானாமதுரை செல்லும் புதிய புகை வண்டித்தடம் 1929 இல் தொடங்கப்பட்டது. 1928 இல் நகரில் முழுமையாக மின்சார வசதியும் செய்யப்பட்டது. மன்னரின் உபயோகத்திற்காக புதிய அரண்மனை கட்டப்பட்டு. 1929 இல் முடிவுற்றது. மன்னர் 1930 ஆம் ஆண்டு இங்கு குடியேறினார்.


இந்திய வைஸ்ராய் மார்க்கியூஸ் வெல்லிங்கடனும், அவரது துணைவியாரும் இவரது ஆட்சியின் போது 1933ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் நாள் புதுக்கோட்டைக்கு வருகை தந்தனர். 17.01.1944 இல் ராஜகோபாலத் தொண்டைமான் தனது 22- வது வயதில் சமஸ்தானத்தின் முழு ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். 1947 இல் டெல்லி சென்ற மன்னர் மகாத்மா காந்தியை சந்தித்து உரையாடினார். 1948 இல் மகாத்மா சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து அவரது ஈமக்கிரியை நாளில் புதுக்கோட்டை சமஸ்தான எல்லைக்குட்பட்ட கோயில்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் சரிசமமாக அனுமதிக்கப்பட வேண்டும் என்று மன்னர் ஆணையிட்டார்.

1948 மார்ச் மாதத்தில் இந்தியாவின் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேலின் அழைப்பினை ஏற்று 1948 மார்ச்  3ஆம் நாள் புதுக்கோட்டை சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைத்தார். அப்போது புதுக்கோட்டை கஜானாவில் இருந்த பல லட்சக்கணக்கான ரூபாய் ரொக்கங்களையும், தங்கம் போன்ற ஆபரணங்களையும் அப்படியே மத்திய அரசிடம் ஒப்படைத்தார். மேலும் அவருக்குச் சொந்தமான விலை மதிப்பற்ற பல கட்டிடங்களையும் . மன்னர் நிர்வாகத்தில் இருந்த அரசர் கல்லூரியையும் அரசிடம் ஒப்படைத்தார். 1972இல் புதுக்கோட்டை தனி மாவட்டமாக உறுவானபோது தமிழ் நாடு அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க புதுக்கோட்டை அரண்மனையையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வழங்கினார்.

ராஜகோபாலத் தொண்டைமான் திருச்சிராப்பள்ளியில் உள்ள புதுக்கோட்டை அரண்மனை வளாகத்திலேயே மிக எளிய வாழ்க்கை வாழ்ந்து வந்தார் . சிறந்த மோட்டார் வாகன தொழில் நுட்ப வல்லுனராக திகழ்ந்து மிக சாமான்ய மனிதானக மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற இவர்1997இல் மறைந்தார்.



தொண்டை மான் வம்சத்தில் இன்றைய தினம் புதுக்கோட்டை மக்களின் செல்ல பிள்ளையாக விளங்கக்கக் கூடியவர்  உயர்  திரு
 கார்த்திக் தொண்டைமான் அவர்களே என்று கூறுவதில்  மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.. அவரை பெருமை படுத்த வேண்டும் என்பதற்காக  இதை நான் இங்கு கூற வில்லை,  அவருடைய மகுடங்களில் ஜொலிக்கும் சிலவற்றை மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.கார்த்திக் தொண்டைமான் அவர்கள் குழந்தை உள்ளம் கொண்டவர்,கரை படியாத கரத்திற்கு சொந்தக்காரர் .இரக்க  சிந்தனை உள்ளம்  கொண்டவர் ,தன்னை தேடி வரும் ஏழை எளிய மக்களுக்கு தன்னால் இயன்ற பொருள் உதவியை  இன்றளவும் செய்து  கொண்டிருக்க கூடிய  மனித நேயமிக்க மாண்பாளர். 
 
17.10.2011 அன்று நடை பெற உள்ள உள்ளாட்சி மன்ற  தேர்தலில் புதுக்கோட்டை நகர் மன்ற தலைவர் பதவிக்கு
திரு. கார்த்திக் தொண்டைமான் அவர்கள் போட்டியிடுகிறார் என்ற செய்தியை அறிந்த புதுக்கோட்டை மக்கள் அனைவரும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  இந்த தேசத்திற்காக தனது ராஜ்யத்தையே விட்டுக்  கொடுத்த  மன்னர் வம்சத்தில்  பிறந்த    திரு.  கார்த்திக் தொண்டை மான் அவர்கள் நகர் மன்ற தலைவராக மக்கள் சேவை செய்ய மக்களே விரும்பும்பொழுது ,மக்கள் அனைவரும் அவருக்கு வாக்கு அளிக்க முன் வருவது என்பது மக்களின் கடமைகளில்  ஒன்றே என்று கருதுகின்றேன்.
கார்த்திக் தொண்டைமான் போன்று ஓர் ஆயிரம் கார்த்திக் தொண்டை மான் இந்த பாரத தேசத்திற்கு வரவேண்டும்,பாரத தாயின் கண்ணீரை துடைக்க !.பாரத் மாத்தாக்கி ஜெய் !