Pages

Thursday, January 27, 2011

எவ்வாறு வாழவேண்டும்

ஒரு மனிதன் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை எவ்வாறு வாழவேண்டும் என தெரிந்து கொள்வோம் .
  ஓர் எட்டில் பயிலாத பழக்கம்
  ஈர் எட்டில் கல்லாத கல்வி
 மூவெட்டில் ஆகாத திருமணம்
  நால் எட்டில் பெறாத குழந்தை
ஐந்தேட்டில் சம்பாதிக்காத    சம்பாத்தியம்
ஆறேட்டில்
செய்யாத செலவு
ஏல் எட்டில் செல்லாத யாத்திரை
எட் ஏட்டில் சாகாத  சாவு

இவை யாவும் பயனற்று போகும்
அதாவது ஒரு மனிதன் தன்னுடைய 8 வயதிற்குள் நல்ல பழக்கங்களை பயின்று இருக்கவேண்டும் .16 வயதிற்குள் கல்வி பயின்று ,24 வயதிற்குள் திருமணத்தை முடித்திருக்க வேண்டும்,32 வயதிற்குள் குழந்தை பெற்றிருக்க  வேண்டும் . நாற்பது வயதிற்குள் சம்பாதித்து ,48 வயதிற்குள் தான் சம்பாதித்த சம்பாத்தியத்தில் தன்னுடைய குடும்பத்திற்கு தேவையான மற்றும் தனக்குள்ள கடமைகளை முடித்திருக்க வேண்டும்.56 வயதில் செல்ல வேண்டிய கோவில் குளங்கள் யாத்திரை இவை யாவையையும் முடித்திருக்க வேண்டும் .அதே போல் 64 வயதிற்கு மேல் இந்த பூமியில் வாழக்கூடாது .மேற்கண்டவைகளை உரிய காலத்தில் முடிக்கவில்லை எனில் இவை யாவும் வீணாகும் . 
(மேற் கண்ட வற்றில் எழுத்து பிழை இருந்தால் மன்னிக்கவும் )

Tuesday, January 25, 2011

Saturday, January 22, 2011

படியில் பயணம் நொடியில்

படியில் பயணம் நொடியில் மரணம் என்ற வாசகத்தை படித்திருக்கலாம் . ஆனால் பஸ் பாடி பில்டிங் செய்யும் இடத்திற்கு சென்று படி எவ்வாறு அமைக்கப்படுகிறது   எனபார்த்தால் தான் அதன் உண்மையான அர்த்தம் உங்களுக்கு விளங்கும்,நான்கு மாதங்களுக்கு முன்னர் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில்
இருந்து வெளியில் புறப்பட்ட பேருந்து,பேருந்துநிலையம் எதிரில் உள்ள நேஷனல் 
lodge அருகே வரும் பொழுது,பேருந்தின்  பின்புறம் படி உடைந்து அதில் நின்ற  வர்கள் காயம் இல்லாமல் தப்பித்தனர்.அந்த இடத்தில் ஸ்பீட் breaker  இருந்ததால்.பேருந்தின் வேகம் குறைந்து பயணிகள் தப்பினர் .பேருந்தில் அமைக்கப்பட்டிருக்கும்  படி மக்கள் உள்ளே ஏறி செல்ல மட்டுமே தவிர அதில் நின்று பயணம் செய்ய அல்ல .ரொம்ப   பேர் படியில்  நின்று கொண்டு  படியை ஒட்டியுள்ள கைபிடியை இறுக பற்றி பேருந்தின் வெளியே 
தொங்குவதை பார்க்கலாம் .அந்த கை பிடி எந்த சப்போர்ட் இல் இருகின்றது என்றால் 
மிக சாதாரணமான  போல்ட்  தான்.  அந்த போல்ட் சப்போர்ட் போக போக குறையும் ,போல்ட் லூசாக இருக்கும் பட்சத்தில் கைபுடி பிடுங்கி கீழே விழ வேண்டியதுதான்.படியில் பயணம் செய்வதை தவிர்த்து விடுவது உத்தமம் .

Thursday, January 13, 2011


Wednesday, January 12, 2011

எம் ஜீ ஆர் நினைவில் இன்று

எம் ஜீ ஆர் நினைவில் இன்று  (< கிளிக் செய்யவும் )

வாழ்வில் முழு வெற்றி பெற்ற மனிதன் முதல் மூன்று படிகளை கடந்துதான் ஆகவேண்டும்
 முதல் படி ஏளனம் கேலி !
இரண்டாவது படி கண்டனம் ஆர்பாட்டம் !

மூன்றாவது படி மக்கள் தாங்களாகவே  ஏற்று கொள்ளுதல் !

Monday, January 10, 2011

பயணம்


ஒரு கல்யாண ப்ரோக்ராம் அட்டென்ட் செய்ய திருப்பூர் செல்ல  வேண்டி இருந்தது  .
நம்ம கோஸ்டி மக்கள்  எல்லாம் திருச்சி இல் இருந்து  TRAIN   புடிச்சு திருப்பூர் போக
முடிவு செய்தோம்.புதுக்கோட்டையில் இருந்து பஸ்சில் திருச்சிக்கு போனோம்.
நேரமாகி விட்ட காரனத்தால ரயில் வே  ஸ்டேஷன் செல்ல மெயின் ரோட்டில் இருந்து ஸ்டேஷன் செல்ல  குறுக்கு வழியில் திடு திடு இன்னு ரயில் வே பிளாட் பார்மில் வேகமாக ஓடினோம்.நான் கோஸ்டி அப்புடின்னு  குறிப்பிட்டு இருப்பது
10 பேர் கொண்ட குழு ஆகும்.நாங்க ஓடிய வேகத்தை வெளியில் உள்ள யார் பார்த்தாலும்
ஏதோ கலவரம் போல தெரியும் . ஏன்ன TRIAN யில் பயணம் செய்ய டிக்கெட் எடுக்கணும்
மேலும் புறப்பட தயார உள்ள TRAIN இல் பயணம் செய்ய இடம் பிடிக்கணும்  என்ற
வேகம்.நாங்க ஓடி வந்த வேகத்தை பார்த்த டி டி ஆர் எங்க எல்லோரையும் பார்த்து
எந்த TRAIN இல் இருந்து தப்பி ஓட பாக்குறீங்க உங்களோட டிக்கெட் எங்கே காமிங்க
என்றார் ,சார் இனிமே தான் திருப்பூருக்கு டிக்கெட் எடுக்கணும் என்றோம்.பிளாட் பாம் டிக்கெட் இருக்க அப்புடின்னு இன்னொரு கேள்விகனையை நம்ம மேல தொடுத்தார்.இல்ல சார் என்றதும் ௨௦௦௦ ரூபாய் பைன் கட்டிட்டு போங்க என்றார்
பதிலுக்கு.வழிப்பறி கொள்ளையனை விட கேவலமாக ஒரு சில நபர் களிடம் இருந்து
பணத்தை வாங்கிய பின்னரே TRAIN இல் செல்ல அனுமதித்தார் .பாவம் அது அவரோட கடமை இது நம்ம தலையில் எழுதிய விதின்னு புறப்பட்டோம் .

படிச்சவங்க கூட

ரயிலுக்கு நேரமாச்சு என்ற வாசகத்தை பலர் பயன் படுத்துவதை பார்த்திருப்போம் .
ஆனா ரயில் என்றால் தண்டவாளம் என்று பொருள் .ரொம்ப பேர்  இங்கிலாந்து
லெட்டர் என சொல்லவதைகேட்டு இருக்கலாம்.அட அது INLAND லெட்டர் அதாவது
உள்ளூர் கடிதம் என்று பொருள்.இன்னும் கொஞ்சம் பேரை பார்த்தால் உங்களோட
நெகடிவ் PLACE எதுங்க சார் என கேட்பதை பார்க்கலாம் ,அய்யா அது நெகடிவ் பிளேஸ் கிடையாது,அதுக்கு பெயர் NATIVE PLACE .ரொம்ப படிச்சவங்க கூட சில நேரம்
கரண்ட் கட் ஆகிடுச்சு என சொல்வதை காணலாம்.அது தப்பு உண்மையில் பவர்
FAILURE என்று தான் சொல்லணும்.இன்னும் கொஞ்சம் பேர் அடுத்தவனை பார்த்து
அவன் UNDECENT FELLOW என சொல்வதை காணலாம்.அது INDECENT என்று தான்
சொல்லணும்.கிராமத்திலே சில பேர் தம்பி அந்த கேட் கதவை மூடு என சொல்வதை கேட்ருக்கலாம்,அய்யா கேட் வேற கதவு வேறவா?

இல்லாமை இல்லாத நிலை வேண்டும்





ஏழை மாணவர்களுக்கு மாவட்ட மனித நேய மக்கள் மன்றத்தின் சார்பாக
இலவச
சீருடை
வழங்கிய நிகழ்ச்சியின் ஒரு பகுதி.

Sunday, January 9, 2011

தெரியுமா ?

 இலவச சீருடை                                      (ஆட்டோ ஓட்டுனர்களுக்கு )                                                                                                                 
பட்டறிவு என்றால் என்ன என உங்களுக்கு தெரியுமா ? அனுபவமே பட்டறிவு ஆகும் .மனிதன் தனக்கு கிடைக்கும் பட்டறிவை கொண்டு பல சாதனைகளை செய்கின்றான்.சிறுகுழந்தை நெருப்பை பார்த்தால் தொட்டு பார்க்க நினைக்கும்
ஆனால் சூடு பட்ட பின்னர் விட்டு விலக நினைக்கும். சாதரணமாக நமது பள்ளிகளில் ஆசிரியர்கள் பாடம் எடுப்பதை பார்க்கலாம் சக்கரை இனிக்கும்,பாகற்காய்
கசக்கும் என குழந்தைகளுக்கு பாடம் நடத்துவதை விட ஒரு துளி சக்கரையை
குழந்தையின் வாயில் போட்டால் அக்குழந்தை சக்கரையின் இனிப்பை அனுபவ
பூர்வமாக உணரும்.சித்தன்னவாசல் ஓவியங்களை பாட புத்தகத்தில் எழுதி இருப்பதை மனப்பாடம் செய்வதை விட, சித்தன்னவாசல் சென்று ஓவியங்களை
கண்ணால் பார்க்க வாழ்நாள் முழுவதும் மறக்காமல் இருக்குமே.மனிதன் எல்லா
விதமான அனுபவங்களையும் சாதரணமாக பெறமுடியாது ஏனெனில் உதாரணமாக
ஒரு மனிதன் புதிதாக டீக்கடை ஆரம்பிக்க வேண்டுமெனில் அவனுக்கு அது தொடர்பான அனுபவம் வேண்டும்,இல்லையெனில் அனுபவம் உள்ளவரை பணியில் அமர்த்த வேண்டும்.தெரிந்த தொழிலை விட்டவனும் தெரியாத தொழிலை தொட்டவனும் கெடுவான் என லாரி களின் பின்னால் எழுதி இருப்பதை காணலாம்.
அனுபவமே மிக சிறந்த ஆசான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.