Pages

Sunday, January 9, 2011

தெரியுமா ?

 இலவச சீருடை                                      (ஆட்டோ ஓட்டுனர்களுக்கு )                                                                                                                 
பட்டறிவு என்றால் என்ன என உங்களுக்கு தெரியுமா ? அனுபவமே பட்டறிவு ஆகும் .மனிதன் தனக்கு கிடைக்கும் பட்டறிவை கொண்டு பல சாதனைகளை செய்கின்றான்.சிறுகுழந்தை நெருப்பை பார்த்தால் தொட்டு பார்க்க நினைக்கும்
ஆனால் சூடு பட்ட பின்னர் விட்டு விலக நினைக்கும். சாதரணமாக நமது பள்ளிகளில் ஆசிரியர்கள் பாடம் எடுப்பதை பார்க்கலாம் சக்கரை இனிக்கும்,பாகற்காய்
கசக்கும் என குழந்தைகளுக்கு பாடம் நடத்துவதை விட ஒரு துளி சக்கரையை
குழந்தையின் வாயில் போட்டால் அக்குழந்தை சக்கரையின் இனிப்பை அனுபவ
பூர்வமாக உணரும்.சித்தன்னவாசல் ஓவியங்களை பாட புத்தகத்தில் எழுதி இருப்பதை மனப்பாடம் செய்வதை விட, சித்தன்னவாசல் சென்று ஓவியங்களை
கண்ணால் பார்க்க வாழ்நாள் முழுவதும் மறக்காமல் இருக்குமே.மனிதன் எல்லா
விதமான அனுபவங்களையும் சாதரணமாக பெறமுடியாது ஏனெனில் உதாரணமாக
ஒரு மனிதன் புதிதாக டீக்கடை ஆரம்பிக்க வேண்டுமெனில் அவனுக்கு அது தொடர்பான அனுபவம் வேண்டும்,இல்லையெனில் அனுபவம் உள்ளவரை பணியில் அமர்த்த வேண்டும்.தெரிந்த தொழிலை விட்டவனும் தெரியாத தொழிலை தொட்டவனும் கெடுவான் என லாரி களின் பின்னால் எழுதி இருப்பதை காணலாம்.
அனுபவமே மிக சிறந்த ஆசான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

No comments:

Post a Comment