Pages

Saturday, February 26, 2011

கவி காரை அழகப்பன்

புதுகை நகர் மன்ற தலைவி ராமதிலகம் தன்மகன் செந்தில்குமார் திருமணத்திற்காக
கவி காரை அழகப்பன் திரைபடபாடலசிரியர் எழுதிய கவிதை


உடையப்பா என்று சொன்னால் புதுக்கோட்டை

ஊரில் (யாரும்)தெரியாதார் ஆளில்லை ; தனக்கொரு
படையப்பா என்றே இயக்கமதில் பிரிவுப்

படைகளை உருவாக்கி யதில் நீயில்லை ; காசுக்கொரு

முடையப்பா என்ற போதும் முகம்சுளித்ததில்லை ; இளமையில்
இளங்கலை பயிலயில் நீ இந்திக்கு வழி விட்டதில்லை ;

உடையப்பா என்றே இந்திமொழிப் பலகைகளை
அழகப்பர் கல்லூரி அருகே ஊக்கமாய் உடைத்தெறிந்தாய் !

தடையப்பா என்றே எவரும் தருகின்ற இன்னலதை
தடந்தோளு ண்டேன்று தகர்த்தே எறிந்திட்டாய் !

மனையறத்து தலைவி ராமதிலகம் நகர்
மன்றத்து தலைவியனாள்; பல் சாதனைகள் புரியலானாள்

இணையறத்தே நீவீர் இணைந்து பெற்ற செந்தில்குமார்

இணையற்ற கலைமான் ; இவண் பிடிகின்றான் வலக்கையால்

துணைக்கொரு இனைமான் புவனேஸ்வரி எனும் வலங்கைமான் !

தடைக்கொரு வழியின்றி தாள்மணிக்கதவம் திறக்கட்டும் !
திணைதேன் மகரந்தங்கள் திடமாய் நுகரட்டும் _ விரிந்தே
இல்லறச் சிறகுகள் இதமாய் பறக்கட்டும் - உங்கள்

நல்லறச் சிட்டுக்களும் முழங்கட்டும் நம்கழகத்து கொள்கைகளை !

நாளும் முயற்சி முன்னேற்றம் முதன்மையுடன் வாழி வாழி !பல்லூழி !

கவி காரை அழகப்பன் திரைபடபாடலசிரியர் எழுதிய கவிதை

Sunday, February 20, 2011

ஆடுகளம்


கிராம மக்களின் பொழுது போக்குகளில் ஒன்றான சேவல் சண்டையை மையமாக கொண்ட படம் தான். ஆடுகளம்,ஆழகான கதா  நாயகியை ஒரு சில பாடல்களில் மட்டுமே அவருக்கு முக்கிய துவம் கொடுத்து,குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால்,படம் முழுவதுமே சேவல் சண்டை தொடர்பாக இருந்ததே தவிர நடிகை டாப்சியை முற்றிலும் பயன் படுத்தவில்லையே என்ற ஏக்கம் படம் பார்பவர்களுக்கு இருக்கும் .  .நாயகன் தனுஷ் க்கு ஆடுகளம்,சிறந்த வெற்றிக்களம்,என்று தான் சொல்லவேண்டும் .பாடல் யாத்தே !யாத்தே மிக அருமை. படம் பார்த்து விட்டு  வெளியில் வருவோர் காதுகளில் எல்லாம் யாத்தே !யாத்தே !பாடல் ஒலித்து கொண்டே இருக்கும். அவ்வளவு  அருமையான பாடல் .கதையின் அம்சம் என்னவென்றால் சேவல் சண்டைக்கு சேவல்களை தயார் செய்து, களத்தில் விடுவது,  அதில் மிகுந்த கில்லாடி பேட்டைகாரர். அவருடைய அணிக்கும் எதிர் அணிக்கும் நடக்ககூடிய சேவல் சண்டையில் வெற்றி  பெறுவது பேட்டைகாரர்  அணிதான்.பேட்டைகாரர் அணியில் இருப்பவர்களில் ஒருவர் தான் தனுஷ் . தனுஷ் நடிப்பு படு சூப்பர் !கதை சொன்னால் சுவாரசியம் கெட்டுவிடும். சண்டை காட்சி அற்புதம், அழகான நாயகி ,பார்க்க வேண்டிய படம்,தனுஷ் நடிப்பு அட்டகாசம்.

Saturday, February 19, 2011

யுத்தம் செய்

பொது இடத்தில் வெட்டப்பட்ட இரண்டுகைகளுடன் ஆரம்பம் ஆகும் யுத்தம் செய்
படம் சேரனுக்கு நிச்சயம் திருப்பு முனையாக அமையும். கதை அருமை படம் விறுவிறுப்பாக இருக்கிறது. சேரன் நடிப்பு அருமை ,ஒரு சில இடங்களில் சேரன் நடிப்பு டாப்.   பெண்கள் ஆடை மாற்றக்கூடிய trial டிரெஸ்ஸிங்  ரூம் உள்ளே துணி மாற்றும் பெண்களை ஓட்டை வழியாக பார்த்து கொண்டிருக்கும் கடை முதலாளி பிடிபட்டு அதன் விளைவாக ஏற்படும் பிரச்சனைகள்,படம் பார்பவர்களை சீட்டின் நுனிக்கு கொண்டு வருகிறது.பொது இடத்தில் கிடைக்ககூடிய கைகள் படம் பார்பவர்களுக்கு,யார் இதை செய்கிறார்கள் ஏன் இதை செய்கிறார்கள் என ஆர்வத்தை தூண்டு கிறது.படத்தின் கதை அருமை ,

Monday, February 14, 2011

சரியான சகுனம்



ஒரு கிராமத்தில் வயதான பாட்டி ஒருத்தி வாழ்ந்துவந்தாள். அந்த பாட்டிக்கு ஒரு மகன் ஒருத்தன் இருந்தான், பாட்டிக்கு வாய்ச்ச மருமகள் சரியான கோபக்காரி, தன்னோட கணவர் இருக்கும் நேரத்தில் மட்டும் மாமியார்கிட்ட அன்பா இருக்கின்ற மாதிரி நடிப்பா,தன்னோட கணவன் வெளியில் சென்றதும் மாமியாருக்கு  சாப்பாடு கொடுக்க மாட்ட. வீட்டின் உள்ளே இருக்காதே என மாமியாரை மாட்டு தொழுவத்தில் தான் படுக்க அனுமதிப்பா,சாப்பாடும் நாயோட தட்டில் தான் . பாட்டி தன்னோட நிலை கண்டு வருந்தி ஒரு முடிவு எடுத்தாள்.மருமகளோட சண்டை போட்டு தன்னோட இந்த நிலையை சரிசெய்ய முடியும் என தீர்மானம் செய்தாள். வழக்கம்போல் கிழவியோட மகன் வீட்டை விட்டு வெளியில் சென்றதும்,மருமகள் கிழவியை மாட்டு தொழுவத்திற்கு போக சொன்னாள்  ஆனால் கிழவி போடி இது என்னோட வீடு நீ வேண்டுமானால் வெளியில் போ என கிழவி மறுக்க .கோப முற்ற மருமகள் வீட்டின் உள்ளே கிடந்த பெரிய உலக்கை யை எடுத்து கிழவியின் தலையில் அடிக்க கிழவி தரையில் சரிந்தாள். மாமியார்  இறந்து விட்டாள் என கிழவியின் மகனுக்கு செய்தி சொல்லி அனுப்ப, மகன் வந்ததும் உடனே கிழவியை,மகனும் மருமகளுமாக சேர்ந்து பக்கத்தில் உள்ள சுடுகாட்டிற்கு எடுத்து சென்றார்கள் .

கிழவியின் உடம்பின் மேல் விறகுகளை அடுக்கி தீயை மூட்டலாம் என பார்த்தால் ரெண்டுபேருமே தீ பெட்டி எடுத்து வர மறந்து விட்டனர் .உடனே கணவன் நான் போயி தீப்பெட்டி எடுத்து வருகிறேன் நீ இங்கே இரு என மனைவியிடம் சொல்ல ,நான் மட்டும் எப்புடி இங்க தனியாக இருக்க முடியும் நானும் உங்களோட வீட்டுக்கு வரேன்னு சொல்லி அவளும் அவனோட புறப்பட்டாள்.உண்மையில் கிழவி சாகவில்லை கிழவி மயக்கத்தில் இருப்பது யாருக்கும் தெரியாது ,திடீரென கிழவிக்கு சுய நினைவு வர தன் மீது அடுக்கி வைத்திருந்த விறகுகளை தள்ளி கிழவி எழுந்து பார்த்தாள்.தன் இருப்பது சுடுகாடு என  உணர்ந்து அருகில் உள்ள கோவிலை நோக்கி ஓடினால் அங்கே சென்று கோவிலில் உள்ள சிலையின் பின்னே அமர்ந்தாள். வீட்டுக்கு போன மகனும் மருமகளும் தீப்பெட்டி எடுத்து வந்து கிழவி உள்ளே இருப்பதாக எண்ணி நெருப்பை மூட்டினான் . கோவில் உள்ளே இருந்த கிழவி மெதுவாக எழுந்து நிற்க முயல தீடிரென நான்கு திருடர்கள் கோவில் உள்ளே வர கிழவி நிலையை உணர்ந்து சிலையின் பின்னே மறைவாக அமர ,உள்ளே வந்த திருடர்கள் காளி சிலையை நோக்கி அம்மா நாங்கள் கொள்ளை அடித்து வந்த பணத்தை இன்று இரவு இங்கே வைக்கலாமா உத்தரவு தாருங்கள் என கேட்க,சிலையின் பின்னால் அமர்ந்திருந்த கிழவி தன்னோடைய வாயால் ச் ச்ச்   என பல்லியை போல் சத்தமிட திருடர்கள் ஆக சரியான சகுனம் என அவர்கள் கொண்டுவந்த நகையை  கோவில் உள்ளே வைத்தனர், காளியை நோக்கி தாயீ இன்று வடக்கு திசை நோக்கி திருடலாமா   ?  என உத்தரவு கேட்க சிலையின்  பின்னால் அமர்ந்திருந்த கிழவி மீண்டும் பல்லி போல் சத்தமிட,    திருடர்கள் சரியான சகுனம் என்று குறி திருட சென்று விட்டனர் .சிலைக்கு பின்னால் அமர்ந்திருந்த கிழவி இதுதான் சமயம் என்று திருடர்களிடம் இருந்த நகைகளை அபேஸ் செய்து கொண்டு தனது இல்லம் நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.கிழவி தன்னுடைய வீட்டிற்கு அதிகாலை நேரம் சென்று அடைந்தாள் . வீட்டின் கதவு தட்டும் ஓசை கேட்டு மருமகள் கதவை திறக்க கிழவியை பார்த்ததும் மயங்கி கீழே  விழுந்தாள்.அவள் போட்ட சத்தத்தில் கிழவியின் மகன்  படுக்கையை விட்டு எழுந்தான். கிழவி உயிருடன் இருப்பதை கண்ட மகன் அம்மா எப்புடிம்மா உயிருடன் வந்தாய் ,என கேட்க , கிழவி ,மகனே நீ என்னை எரித்தவுடன் மேலோகம் சென்றேன் , அங்கு என்னுடைய அம்மா அப்பா ,எனக்கு தேவையான நகைகளையும் பணத்தையும் கொடுத்து என்னை திருப்பி அனுப்பினர் ,இதோ பார் நகை ,மற்றும் பணம் என தான் கொள்ளையரிடம் கொண்டு வந்த தங்கத்தை மகனிடம் காட்ட ,கிழவி சொன்னதை கேட்ட மருமகளுக்கு ஒரு யோசனை தோன்றியது , உடனே தன் கணவனை நோக்கி நாளை என்னை கொண்டு போயி சுடுகாட்டில் வைத்து  எரித்து விடுங்கள் ,நானும் என் அம்மா அப்பா விடம் நகை மற்றும் பணம் வங்கி வருகிறேன் என்று தன் கணவனிடம் சொல்ல ,அவனும் அதை ஏற்று அவளை சுடுகாட்டிற்கு அழைத்து செல்ல கிழவியும் உடன் சென்றாள் .  மருமகளை படுக்க வைத்து அவள் மேல் கட்டை களை அடுக்கி தன் மகனிடம் தான் மறக்காமல் கொண்டு வந்த தீ பெட்டியை கொடுத்தாள்.மகனும் தன் மனைவி மேல் நெருப்பை மூட்டினான்  .கிழவி சாமர்த்தியமாக தன்னை மதிக்காத மருமகளை தானே முன்வந்து சாகும்படி செய்து விட்டாள் .

Tuesday, February 8, 2011

இது எப்புடி இருக்கு




ஒரு கிராமத்தில் குப்பன் என்ற விறகு வெட்டி வாழ்ந்து வந்தான் .விறகு வெட்டி அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு வாழ்க்கை நடத்தி வந்தான் .குப்பன் வழக்கம் போல் காட்டிற்கு செல்லும் வழியில் உள்ள குளக்கரையில் தண்ணீர் அருந்துவது அவன் வழக்கம்,அதே போல் இன்றும் குளத்தின் கரையில் நடந்து செல்லும் பொழுது பல்வேறு கற்பனையில் மனதை அலை பாய விட்டு சென்று கொண்டிருந்தான். திடீர் என ஆகாயத்தில் ஏதோ ஒரு பறவை பறப்பது போல் அவனுடைய மனக்கண்ணில் தோன்ற ஆகாயத்தை அண்ணார்ந்து பார்த்தான், அவன் அண்ணார்ந்து பார்த்த நேரத்தில் அவன் கையில் வைத்திருந்த கோடரி தவறி குளத்தில் விழுந்தது.குப்பனுக்கு வாழ்க்கையே சூனியமாகி  போனது போல் ஆயிற்று.குப்பன் கண்ணில் தாரை தரையாக கண்ணீர் கரை புரண்டு ஓடியது .அவனின் அழுகுரல் கேட்டு வன தேவதை  அவன் முன் தோன்றி குப்பா உனக்கு என்ன வேண்டும், என கேட்டது .தேவதையே என்னுடைய கோடரியை  தண்ணீரில் தவற விட்டு விட்டேன்  என்று கூறினான்.அதை கேட்ட தேவதை குளத்தின் உள்ளே சென்று  தங்கத்தால் ஆனா ஒரு கோடரியை வெளியே கொண்டுவந்தது ,இது உன்னுடைய கோடரியா என குப்பனைபார்த்து கேட்டது.இல்லை இது என்னுடைய கோடரி இல்லை என்றான், மீண்டும் வன தேவதை குளத்தின் உள்ளே சென்று வெள்ளியால் செய்யப்பட்ட மற்றொரு கோடரியை கொண்டு வந்து இது உன்னுடையதா என கேட்டது அதற்கும்  இது தன்னுடையது இல்லை என்றான் .தேவதை மீண்டும் தண்ணீர் உள்ளே சென்று ஒரு இரும்பு கோடரியை குளத்தின் வெளியே கொண்டு வந்து இது உன்னுடையதா என கேட்டது. ஆம் இது தான் என்னுடைய கோடரி என்றான் குப்பன் .தேவதை அவனுடைய நாணயத்தை போற்றி அவன் கையில் மூன்று கோடரிகளையும் தேவதை கொடுத்து மகிழ்ந்தது. கையில் கிடைத்த தங்க கோடரியை கொண்டு தன்னுடைய வாழ்கையை மாற்றி அமைத்து வாழ ஆரம்பித்தான், ஒரு சில வருடங்களுக்கு பிறகு அதே குளக்கரையில் தன்னுடைய மனைவியுடன் நடந்து வரும்  பொழுது ,அவனுடைய மனைவி குளத்தில் விழுந்துவிட்டாள் குப்பன் வணதேவதையை  நோக்கி பிராத்தனை செய்ய ,தேவதை அவன் கண் முன் தோன்றி உனக்கு என்ன வேண்டும் ஏன் அழுகிறாய் என அவனை 

நோக்கி வினாவியது .குப்பன் தேவதையை நோக்கி தாயே என்னுடைய மனைவி குளத்தில் விழுந்து விட்டாள்,என சொல்ல உடனே தேவதை குளத்தின் உள்ளே சென்று நடிகை நமிதாவை காட்டி குப்பா இது தானே உன்னுடைய மனைவி என கேட்க , குப்பனும் ஆமாம் தாயே இது தான் என்னுடைய மனைவி என்று சொல்ல தேவதை குப்பனை நோக்கி ஏன் குப்பா உன்னுடைய நாணயம் தவறி விட்டது என கேட்டான் .அம்மா நீங்கள் முதலில் நமிதாவை காட்டுவீர்கள் பின்னர் அசினை காட்டுவீர்கள் அதன் பின்னர் என் மனைவியை காட்டுவீர்கள் பிறகு எனது நாணயத்தை போற்றி மூன்று பேரையும் எனக்கு பரிசாக தந்து விடுவீர்கள்  ஒருத்தியை வைத்து குடும்பம் நடத்துவதே கடினமாக உள்ளது ,அதனால் தான் பொய் சொன்னேன் என்றான்.இது எப்புடி இருக்கு