Pages

Thursday, June 9, 2011

நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே !

எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே ,அது நல்லவன் ஆவதும் கெட்டவன் ஆவதும் அன்னை வளர்ப்பிலே.இந்த பாடலின் வரிகள் மிகவும் அர்த்தமானது.   .  நான் ஆசிரியர் 
பயிற்சி நிறுவனத்தில் படிக்கும் 
 பொழுது, teaching practice க்காக ஒரு கிராமத்தில் உள்ள பள்ளிக்கு சென்றேன் . அங்கு நான் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு  ஆங்கில பாடம் எடுத்தேன். 
அத்துணை மாணவரும் பாடம் எடுப்பதை கவனிக்க ஒரே ஒரு மாணவன் மட்டும் 
வகுப்பறையின் கரும்பலகையை நோக்காமல் பாட புத்தகத்தை கையில் 
எடுக்காமல் அலட்சியமாக அமர்ந்து இருந்தான்.வகுப்பு நேரம் முடிந்ததும் 
அந்த மாணவனைஅருகே  அழைத்தேன் .காலையில் என்ன தம்பி சாப்புட்டியா
என்றேன் ,அந்த மாணவனின் கண்கள் கலங்கியது  என்ன தம்பி ஏன் அழுகிற என்றேன் மிகவும் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தான். என்ன தம்பி சாப்புடலையா என்றேன் ?  ஆம் என்று தலை ஆட்டினான் ...........
ஏன் சாப்பிட வில்லை ,என்றன். ஸ்கூல் க்கு புறப்படும் பொழுது ,அப்பாவுக்கும் 
அம்மாவுக்கும் சண்டை என்றான் .பாவம் பெற்றோரின் சண்டை அவன் மனதை
பாதித்தது . ஒரு குழந்தை நல்ல ஒழுக்கத்துடன் இருப்பது என்பது  அவனுடைய
 சுற்று சுழலை பொறுத்தது .     குழந்தை பெற்றால் மட்டும் போதாது ,அவர்களின் 
எதிர்கால நலன் கருதி பொறுப்பாக வளர்த்து ஆளாக்க பாடு படவேண்டும் . 

No comments:

Post a Comment