Pages

Friday, August 5, 2011

அய்யா திரு பஞ்சநாதன் DSP

தஞ்சாவூர் மாவட்டம்  மன்னார்குடியில் விவசாய குடும்பத்தில்    பிறந்து வளர்ந்த நம்முடைய திருவாளர் காவல் துறையில் செய்த அரும்பணிகளை இங்கே குறிப்பிடுவதில் நான்  பெருமை அடைகிறேன் . நம்முடைய திருவாளரை பெருமை படுத்து வதற்காக இதை  நான்  இங்கே குறிப்பிட வில்லை அவருடைய மகுடங்களில் ஜொலிக்கும் சிலவற்றை மட்டுமே இங்கே  குறிப்பிட விரும்புகிறேன் .


20.4.1949 ஆம் வருடம் தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடியில்  பிறந்து வளர்ந்த  அய்யா  பஞ்சநாதன் அவர்கள் இளங்கலை தாவரவியல் பயின்று, அதன் பின்னர் முதுகலை தமிழ் இலக்கியம் பயின்றவர் .1975 ஆம் வருடம் காவல்துறையில் துணை பயிற்சி ஆய்வாளராக  பொன்னமராவதி ல் 6 மாத காலம் பனி யாற்றினார்.
அதன் பின்னர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருகோகர்ணம் காவல் நிலையத்தில் 1976 ஆம் வருடம் பணியாற்றினார் .1976  மற்றும் 1977  ல் அரிமளம் காவல் நிலையத்தில் பணியாற்றியவர்  ,மேலும் தனிப்பிரிவான நுண் அறிவுப்பிரிவில் நான்கு  ஆண்டு காலம் பணியாற்றியவர். 

அய்யா அவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் 1980 முதல் 1983 வரை நகர காவல் நிலையத்தில் பணியாற்றியவர்.

அய்யா பஞ்சநாதன் அவர்கள்  புதுக்கோட்டையில் பணியாற்றிய காலத்தில் நான் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவனாக இருந்தேன் .

அந்த கால கட்டத்தில் நகர காவல் நிலையம் தவிர வேறு காவல் நிலையம் கிடையாது .
அய்யா அவர்களின் பெயர் தெரியாதவர்கள் புதுக்கோட்டையில் பிறந்தவர்களாக இருக்க முடியாது , அய்யா அவர்கள்  அத்துணை பிரபலம் காரணம் காந்திநகர் ,சந்தை பேட்டை ,போஸ் நகர், வடக்கு 4  ஆகிய வீதிகளில்     ரௌடிசத்தை அடக்கியவர் .மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தையே  கலக்கிய பிரபல ரௌடியை தெருத்தெருவாக இழுத்து வந்து அந்த நபரின் கொட்டத்தை அடக்கி  புதுக்கோட்டை மாவட்ட சிறு வியாபாரிகள் மனதில் தெய்வமாக விளங்கியவர் .

அய்யா அவர்கள் புதுக்கோட்டையில் பணியாற்றிய காலத்தில் கீழ நான்காம் வீதியில் தேவ தாசி  முறை ஒழிக்கப்பட்ட பின்னரும் 30 க்கும் மேற்பட்ட குடும்பங்கள்  தங்களது குலத்தொழிலாக தாசித் தொழிலை  பின்பற்றி இருந்த காலம் ,அதாவது சாதரணமாக அந்த குறிப்பிட்ட தெருவழியே நல்லவர்கள் கூட நடந்து  செல்ல முடியாத காலம் .

குறிப்பிட்ட விலை மாதர்களை கைது செய்து சென்னை அல்லது பெங்களூர் போன்ற தொலை தூரத்தில் உள்ள ஊர்களுக்கு குறிப்பிட்ட பேருந்தின்  ஓட்டுனர் மற்றும் நடுத்துனர் பொறுப்பில் , விலை மாதர்கள் மறுபடியும் புதுக்கோட்டைக்கு  வராத வண்ணம் கடமையாற்றியவர் .விலை மாதர்களுக்கு
புனர் வாழ்வு அளிக்கும் வகையில் மளிகை கடை வைப்பதற்கு கடனாக  அன்றைய தினம் கலெக்டர் ஆக பணியாற்றிய திரு .முருகராஜ் போன்ற கலெக்டர் மூலமாக ஏற்பாடு செய்து கொடுத்தவர் அய்யா திரு பஞ்சநாதன் அவர்கள் தான் .அவர் பணியாற்றிய காலத்தில் ரௌடிகள்  மற்றும் விலை மாதர்கள் இல்லை என்பது பெருமைக்குரிய விஷயம் .
அய்யா அவர்கள் திருச்சியில்  DSP  யாக பனி யாற்றி பின்னர்  ஓய்வு பெற்றார் .

அய்யா அவர்களின் சேவையை பற்றி சொல்ல வேண்டுமானால் இங்கு எழுதுவதற்கு பக்கங்கள் போதாது ,அய்யா பஞ்சநாதன் போன்று ஓர் ஆயிரம் பஞ்சநாதன் இந்த பாரத தேசத்திற்கு வரவேண்டும்,பாரத தாயின் பெருமையை நிலை நாட்டிட !பாரத் மத்தாக்கி ஜே!