Pages

Friday, December 7, 2012

புதுக்கோட்டை இடைதேர்தல் பணியில்

                                                           வாக்கு சேகரிப்பு
இடை தேர்தல் பணியில் 27 வது வட்ட தேர்தல் பணிக்குழு






புதுக்கோட்டை இடைதேர்தல் பணியில்


Thursday, July 26, 2012

புதுக்கோட்டை இடை தேர்தல் பணியில்

புதுக்கோட்டை இடை தேர்தல் பணியில் மாண்பு மிகு அமைச்சர் ஒ.பன்னீர் செல்வம்  

புதுக்கோட்டை இடை தேர்தல் பணியில் பூந்த மல்லி மணிமாறன் MLA
அம்மா வருகையை முன்னிட்டு அணிதிரண்டு  செல்லும்
27 வது வட்ட மகளீர் 




Sunday, May 27, 2012

மாண்பு மிகு அமைச்சர் B . V . ரமணா

இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களின் ஆணைகினங்க எதிர்வரும் 12 .06 .2012


அன்று நடை பெரும் புதுக்கோட்டை சட்ட மன்ற இடை தேர்தலில் களமிறக்க பட்டிருக்கும் அம்மாவின் ஆசி பெற்ற வெற்றி வேட்பாளர் திரு.கார்த்திக் தொண்டைமான் அவர்களுக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் (குறிப்பாக பூத் எண் 73 , 74 ,75 வார்டு எண் 26 ,27 ,36)

ஆகிய பூத்திற்கு மண்டல பொறுப்பாளர் ஆக மாண்புமிகு அமைச்சர் B .V .ரமணா அவர்கள் நியமிக்கப்பட்டார் . வேட்பாளர் திரு. கார்த்திக் தொண்டைமான் அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ததில் இருந்து மூன்று மணி நேரத்திற்குள் .அமைச்சருக்குகாக நியமிக்கப்பட்ட மூன்று பூத் க்கும் பொதுவாக சாந்தனாதபுரம் பகுதியில் புதுக்கோட்டை சட்ட மன்ற தொகுதியே வியக்கும் அளவில் முதன் முதலாக வாக்கு சாவடி திறந்து வைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.இந்த நிகச்சியில் மாவட்ட கழக செயலாளர் திரு .டாக்டர் விஜய பாஸ்கர் MLA மற்றும் வேட்பாளர் திரு கார்த்திக் தொண்டைமான், 27 வது வட்ட கழக செயலாளர் B . துரைராஜ் , நகர் மன்ற உறுப்பினர் புரு . கிருஷ்ணகுமார் , அம்மா பேரவை 27வட்ட செயலாளர் P . கண்ணன் , நகர அம்மா பேரவை பொருளாளர் ஜனார்த்தனன் , திருமயம்


ஒன்றிய செயலாளர் திரு ராமு , வட்ட தலைவர் செல்வக்குமார் , வட்ட பிரதிநிதி , ராஜேந்திரன் , ஆனந்தன் பொருளாளர் மாமுண்டி ஆகியோர் கலந்து கொண்டனர் . இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் களமிறங்கிய முதல் நாள் இரவே தனது உதவியாளர் திரு. தேவராஜன் மூலமாக சந்தனாதபுரம் பகுதில் உள்ள திமுக வை சேர்ந்த மற்றும் தே. மு . திமுக ஆகிய இரண்டு கட்சியுளும் உள்ள முக்கிய நபர்களை அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைத்திட ஏற்பாடு செய்தார் . அதே போல் தன்னுடைய முதல் நாள் தேர்தல் பிரச்சாரத்தில் இரண்டு கட்சியின் நிர்வாகிகளை அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைத்தார். மாண்பு மிகு அமைச்சர் B . V . ரமணா போல் ஓர் ஆயிரம் ரமணா இந்த அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு வரவேண்டும்.ஜெய் ஹிந்த் .

Sunday, February 26, 2012

அம்மா அவர்களின் 64 வது பிறந்த தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை



 

இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களின்
64 வது பிறந்த தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை
27   வது வட்ட கழகத்தின் சார்பாக சிறுவர் சிறுமியர்களுக்கான மாபெரும்
விளையாட்டு போட்டி நிகழ்ச்சியில் வட்ட கழக செயலாளர் பா.துரைராஜ் அவர்கள் தலைமையில் நகர கழக செயலாளர் திரு.க. பாஸ்கர் மற்றும் நகர் மன்ற உறுப்பினர் பு .கிருஷ்ண குமார், முன்னிலையில் ,நகர தந்தை திரு. கார்த்திக் தொண்டைமான் மற்றும் நகர் மன்ற துணை தலைவர் திரு

 SAS சேட் என்ற   . அப்துல் ரகுமான் போட்டியில் கலந்து கொண்ட சிறுவர் ,சிறுமிகளுக்கு , பரிசுகளை வழங்கினார்கள் .

Wednesday, February 1, 2012

இதை படிக்காதிங்க ப்ளீஸ்

உங்களுக்கு ஏழரை சனி பிடித்துள்ளதா ? அதில் இருந்து எப்படி தப்பிப்பது என்று யோசனை செய்பவரா நீங்கள் ?   இதோ உங்களுக்காக ஒரு சில ஆலோசனைகள்.
சனி பகவனை பொறுத்தவரை நீதி மான், தன்னுடைய கடமையில் கண்ணும் கருத்துமானவர் ,கடமை தவறாதவர் ,
இருப்பினும் 

ஏழரைச் சனியின் முதல் பகுதியை (முதல் இரண்டரை வருடங்களை) விரையச்

சனி என்பார்கள் கோச்சாரப்படி சந்திர ராசிக்கு அது 12ஆம் இடம். ஆகவே

அது விரையச் சனி காலம். பண நஷ்டம், காரிய நஷ்டம், உடல் உபாதைகளால்

நாள் கணக்குகள் நஷ்டம் என்று நஷ்டமாகவே அக்காலம் கழியும்.
அடுத்த பகுதியை (அடுத்த இரண்டரை வருடங்களை) ஜென்மச் சனி என்பார்கள்.

அதாவது ராசியைக் கடந்து செல்லும் காலம். அந்தக் கால கட்டங்களில் ஏகத்துக்கும்

மனப் போராட்டமாக இருக்கும். மன உளைச்சல்களாக இருக்கும்.
அடுத்த பகுதியை (அடுத்த இரண்டரை வருடங்களை) கழிவுச் சனி என்பார்கள்.

அந்தக் காலகட்டம், கடந்து போன ஐந்தாண்டுகளை விடச் சற்று தொல்லைகள்

குறைந்ததாக இருக்கும்.

அந்த முதல் பகுதியான விரையச் சனி நடக்கும் காலத்தில் நடக்கும் திருமணங்கள்

சோபிப்பதில்லை. தம்பதிகளுக்குள், பிரிவு, பிரச்சினை என்று போராட்டமாக

இருக்கும். விவரம் தெரிந்தவர்கள் தங்கள் குழந்தையின் திருமணத்தை விரையச்

சனியின் காலத்தில் நடத்தி வைக்க மாட்டார்கள்.


இரண்டாவது சுற்றில் (அதாவது பொங்கு சனியில்) ஜாதகனைச் சனீஷ்வரன்

கைதூக்கிவிடுவான். பல கஷ்டமான அனுபவங்களைக் கொடுத்த பிறகுதான் தூக்கி உட்காரவைப்பான்.
மூன்றாவது சுற்று அந்திம காலம். ஜாதகனின் ஆயுள் முடியும் நேரம் என்றால் சனி

மேலே அனுப்பி வைத்து விடுவார்.


அதனால் கடைசி சுற்றுச் சனி என்றால் எல்லோரும் பயம் கொள்வார்கள். ஆனால்

அது எல்லோருக்கும் பொதுவானதல்ல! ஒருவனின் ஆயுள் எப்போது முடியும்,

எந்த தசா புத்தியில் அது வரும் என்பது எட்டாம் பாவப் பாடத்தில் வரும்.

அப்போது அதைத் தெரிந்து கொள்ளுங்கள். அதன்படிதான் மூன்றாவது சுற்றில் வரும்

சனி அனுப்பிவைப்பார். இல்லையென்றால இல்லை! மூன்று சுற்றுக்களையும்

கடந்து வாழ்ந்தவர்கள், வாழ்கின்றவர்கள் நிறைய உண்டு!


அஷ்டமச் சனி என்பது , எவர் ஒருவர் ராசிக்கு எட்டாம் இடத்தில் சனி இருக்கிறாரோ , அதை வைத்துக் கூறுவது. இப்போது கண்ணியில் சனி இருப்பதால் , கும்பத்திற்கு இப்போது அஷ்டமம் நடந்து கொண்டு இருக்கிறது.
பொதுவாக அஷ்டமம் என்பது , ஏழரை ஆண்டு அனுபவிக்கும் தொல்லைகளை அந்த இரண்டரை வருடத்திலே கொடுத்துவிடும்.
இதனால் சனி பகவானின் கொடுமையில் இருந்து நீங்கள் தப்பிக்க , முடிந்தவரை நீங்கள் செய்யும் தவறுகளை திருத்திக் கொண்டு , இறை வழிபாடு முறைப்படி செய்தலே. இல்லையென்றால் மிக சிரமமாகத்தான் உணர்வீர்கள்...


நீலப்பட்டு வாங்கி சனிபகவானுக்கு சாற்றலாம்.


நீல உடைகள் அணிந்துவந்து சனிபகவானை வழிபடலாம்.


கறுப்பு எள் மற்றும் கருப்பட்டி அல்லது சர்க்கரை கலந்த பண்டங்களை இடித்து சனிபகவானுக்கு படைத்து பிறருக்கு பிரசாதமாக வழங்கலாம்.


சனிபகவான் முன்பாக நல்லெண்ணெய்,நெய்,இலுப்பை எண்ணெய் கலந்து சிட்டி விளக்கில் திரி வைத்து விளக்கேற்றி 9 முறை வலம்வந்து வணங்கலாம்.


கோயிலுக்கு அருகில் உள்ள காக தீர்த்தத்தில் நீராடி சனிபகவானை வழிபடலாம்.








 


Wednesday, January 18, 2012

MGR அவர்களின் 95 வது பிறந்த தினத்தை முன்னிட்டு





புதுக்கோட்டை டவுன் சாந்தனாதபுரம் பகுதியில் புரட்சி தலைவர்
MGR  அவர்களின் 95  வது பிறந்த தினத்தை முன்னிட்டு 27
வது வட்ட அ.இ.அ .தி .மு. க வட்ட கழக செயலாளர் பா.துரைராஜ் தலைமையில்,நகர செயலாளர் க .பாஸ்கர் முன்னிலையில் மாவட்ட செயலாளர் திரு. வீ .சீ .ராமையா அவர்கள் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார் . மேலும் இந்  நிகழ்ச்சியில் நகர தந்தை கார்த்திக்  தொண்டைமான் ,நகர துணை தலைவர் எஸ் .ஏ .எஸ் சேட்,
நகர் மன்ற உறுப்பினர் பு. கிருஷ்ணகுமார் ,ராஜேந்திரன் ,மாமுண்டி ,ஜனார்த்தனம்
கண்ணன் ,செல்வகுமார் அண்ணாதுரை ,  ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.