ஒரு கிராமத்தில் குப்பன் என்ற விறகு வெட்டி வாழ்ந்து வந்தான் .விறகு வெட்டி அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு வாழ்க்கை நடத்தி வந்தான் .குப்பன் வழக்கம் போல் காட்டிற்கு செல்லும் வழியில் உள்ள குளக்கரையில் தண்ணீர் அருந்துவது அவன் வழக்கம்,அதே போல் இன்றும் குளத்தின் கரையில் நடந்து செல்லும் பொழுது பல்வேறு கற்பனையில் மனதை அலை பாய விட்டு சென்று கொண்டிருந்தான். திடீர் என ஆகாயத்தில் ஏதோ ஒரு பறவை பறப்பது போல் அவனுடைய மனக்கண்ணில் தோன்ற ஆகாயத்தை அண்ணார்ந்து பார்த்தான், அவன் அண்ணார்ந்து பார்த்த நேரத்தில் அவன் கையில் வைத்திருந்த கோடரி தவறி குளத்தில் விழுந்தது.குப்பனுக்கு வாழ்க்கையே சூனியமாகி போனது போல் ஆயிற்று.குப்பன் கண்ணில் தாரை தரையாக கண்ணீர் கரை புரண்டு ஓடியது .அவனின் அழுகுரல் கேட்டு வன தேவதை அவன் முன் தோன்றி குப்பா உனக்கு என்ன வேண்டும், என கேட்டது .தேவதையே என்னுடைய கோடரியை தண்ணீரில் தவற விட்டு விட்டேன் என்று கூறினான்.அதை கேட்ட தேவதை குளத்தின் உள்ளே சென்று தங்கத்தால் ஆனா ஒரு கோடரியை வெளியே கொண்டுவந்தது ,இது உன்னுடைய கோடரியா என குப்பனைபார்த்து கேட்டது.இல்லை இது என்னுடைய கோடரி இல்லை என்றான், மீண்டும் வன தேவதை குளத்தின் உள்ளே சென்று வெள்ளியால் செய்யப்பட்ட மற்றொரு கோடரியை கொண்டு வந்து இது உன்னுடையதா என கேட்டது அதற்கும் இது தன்னுடையது இல்லை என்றான் .தேவதை மீண்டும் தண்ணீர் உள்ளே சென்று ஒரு இரும்பு கோடரியை குளத்தின் வெளியே கொண்டு வந்து இது உன்னுடையதா என கேட்டது. ஆம் இது தான் என்னுடைய கோடரி என்றான் குப்பன் .தேவதை அவனுடைய நாணயத்தை போற்றி அவன் கையில் மூன்று கோடரிகளையும் தேவதை கொடுத்து மகிழ்ந்தது. கையில் கிடைத்த தங்க கோடரியை கொண்டு தன்னுடைய வாழ்கையை மாற்றி அமைத்து வாழ ஆரம்பித்தான், ஒரு சில வருடங்களுக்கு பிறகு அதே குளக்கரையில் தன்னுடைய மனைவியுடன் நடந்து வரும் பொழுது ,அவனுடைய மனைவி குளத்தில் விழுந்துவிட்டாள் குப்பன் வணதேவதையை நோக்கி பிராத்தனை செய்ய ,தேவதை அவன் கண் முன் தோன்றி உனக்கு என்ன வேண்டும் ஏன் அழுகிறாய் என அவனை
super....
ReplyDeleteஉங்களுக்கு நமீதா வேணும்னா அதை நேரா சொல்லுங்க சார்...
ReplyDeletetamilmanam or indli ல பப்ளிஷ் பண்ணுங்க சார் நிறைய fans கிடைப்பார்கள் ...
ReplyDelete