Pages

Saturday, February 26, 2011

கவி காரை அழகப்பன்

புதுகை நகர் மன்ற தலைவி ராமதிலகம் தன்மகன் செந்தில்குமார் திருமணத்திற்காக
கவி காரை அழகப்பன் திரைபடபாடலசிரியர் எழுதிய கவிதை


உடையப்பா என்று சொன்னால் புதுக்கோட்டை

ஊரில் (யாரும்)தெரியாதார் ஆளில்லை ; தனக்கொரு
படையப்பா என்றே இயக்கமதில் பிரிவுப்

படைகளை உருவாக்கி யதில் நீயில்லை ; காசுக்கொரு

முடையப்பா என்ற போதும் முகம்சுளித்ததில்லை ; இளமையில்
இளங்கலை பயிலயில் நீ இந்திக்கு வழி விட்டதில்லை ;

உடையப்பா என்றே இந்திமொழிப் பலகைகளை
அழகப்பர் கல்லூரி அருகே ஊக்கமாய் உடைத்தெறிந்தாய் !

தடையப்பா என்றே எவரும் தருகின்ற இன்னலதை
தடந்தோளு ண்டேன்று தகர்த்தே எறிந்திட்டாய் !

மனையறத்து தலைவி ராமதிலகம் நகர்
மன்றத்து தலைவியனாள்; பல் சாதனைகள் புரியலானாள்

இணையறத்தே நீவீர் இணைந்து பெற்ற செந்தில்குமார்

இணையற்ற கலைமான் ; இவண் பிடிகின்றான் வலக்கையால்

துணைக்கொரு இனைமான் புவனேஸ்வரி எனும் வலங்கைமான் !

தடைக்கொரு வழியின்றி தாள்மணிக்கதவம் திறக்கட்டும் !
திணைதேன் மகரந்தங்கள் திடமாய் நுகரட்டும் _ விரிந்தே
இல்லறச் சிறகுகள் இதமாய் பறக்கட்டும் - உங்கள்

நல்லறச் சிட்டுக்களும் முழங்கட்டும் நம்கழகத்து கொள்கைகளை !

நாளும் முயற்சி முன்னேற்றம் முதன்மையுடன் வாழி வாழி !பல்லூழி !

கவி காரை அழகப்பன் திரைபடபாடலசிரியர் எழுதிய கவிதை

1 comment: