இதயம் பலகீனம் உள்ளவர்கள் இந்த கதையை படிக்க வேண்டாம் ,அதே போல் கர்ப்பிணிகள் இந்த தொடரை படிக்க வேண்டாம். இது யாரைப்பற்றியும் குறிப்பிடும் தொடர் இல்லை . மேலும் இது முழுக்க முழுக்க கற்பனையே .(உண்மையா ?)
காலை நேரம் கூவும் சேவலின் சத்தம் மூர்த்தியின் காதுகளை கிழிக்க மெதுவாக படுக்கையை விட்டு எழுந்து தன் முன்னே உள்ள சாமி படத்தில் விழித்தான் . பாவம் இன்றைய பொழுது அவனுக்கு நல்ல பொழுதாக இருக்காது என ,அவனுக்கு தெரியாது ,அவனுடைய வாழ்க்கையில் துயரம் அவனை சந்திக்க போகிறது என தெரியாமல் வழக்கம் போல் தன்னுடைய ஆட்டோவை துடைத்து காலைகடன்களை முடித்து
சவாரிக்கு தயார் ஆனான் . வண்டியை ஸ்டார்ட் செய்து இறைவனை வேண்டி முதல் கேயரை போட்டு வண்டியை நகர்த்தினான் ,அவனுக்காகவே காத்திருந்தது போல்கருப்பு நிற பூனை அவனது ஆட்டோ வின் குறுக்கே சென்றது.
ஆட்டோ ஆட்டோ stand ல் போய்நின்றது .மூர்த்தி காகவே காத்திருந்தது போல் உயரமான இரண்டு பேர் ,தம்பி காவல் நிலையம் வரை சவாரி போகலாமா என கேட்க. உக்காருங்க உள்ளே என கூறி வண்டி காவல்நிலையம் நோக்கி சென்றது. காவல் நிலையத்தில் இறங்கிய இரண்டு பெரும் மூர்த்தி ன் கைகளை இருக பற்றி டே உள்ள வாடா என இழுக்க மூர்த்தி தடுமாறிபோனான். காவல் நிலையம் உள்ளே சென்றதும் சவாரி வந்த இருவரும் தங்களுடைய ID card ஐ உள்ளே இருந்த இன்ஸ்பெக்டர் வசம் காட்ட அவர்களும் காவல் துறை சேர்ந்தவர்கள் தான் என முடிவு செய்தான் மூர்த்தி,ஆனால் தன்னை ஏன் அழைத்து வந்தார்கள் என குழம்பி நின்றான்.பேப்பர் பேனாவோடு வந்த இன்ஸ்பெக்டர் டே உண்மையை சொல்லு ஒழுங்கா, பொண்ண கடத்தி எங்க வித்த ,உண்மையை சொல்லு பொண்ணு உயிரோட இருக்கா இல்லை கொன்னுட்டியா .
மூர்த்தி இன்ஸ்பெக்டர் ஐ நோக்கி சார் என்ன கேட்குரிங்கன்னு எனக்கு ஒன்னும் புரியலை .பளார்னு ஒரு
அரை அவன் முகத்தில் விழுந்தது ,பொறி கலங்கியது போல் இருந்தது மூர்த்திக்கு .
டே உன்னை போல் எத்தனை பேரை பாத்திருப்பேன் டே போன வருஷம் உன்னோட
வீட்டுக்கு வந்த லலிதான்கிற பொண்ணு அவளோட வீடு போய் சேரலை உண்மைய சொல்லு பொண்ணு எங்கடா மீண்டும் ஒரு அரை அவன் முகத்தில் விழுந்தது .
சார் சத்தியமா எனக்கு ஒன்னும் தெரியாது நீங்க சொன்ன மாதிரி ஒரு பொண்ணு போன வருடம் ஒரு நாள் மதிய சாப்பாடு சாப்பிட வீட்டுக்கு போன போது ,எங்க வீட்டுல ஒரு பொண்ணு சாப்பிட்டுகிட்டு இருந்துச்சு ,நான் அம்மாகிட்ட ,ஏம்மா இது யாருன்னு கேட்டப்ப பாவம் இந்த பொண்ணு வீட்டுல ரொம்ப கொடுமை படுத்துறாங்களாம் அதாவது இந்த பொண்ணுக்கு அம்மா இல்லையாம்,வீட்டு வேலை பாக்குறேன் எங்கையாவது சேர்த்து விடுங்கன்னு சொன்னுச்சு யாரும்மா கூட்டிகிட்டு வந்தாங்கன்னு அம்மா கிட்ட கேட்டேன் அம்மா சொன்னங்க வாசல்கிட்ட நின்னு இந்த பொண்ணு அழுதுகிட்டு நின்னுச்சு அப்போ உங்க அண்ணன் தான் உள்ள கூட்டிகிட்டு வந்து சாப்பாடு கொடுக்க சொன்னான் சாப்பிட்டதும் பக்கத்து வீட்டுக்கு, வீட்டு வேலைக்கு ஆள் . வேணுமுன்னு சொன்னங்க அங்க கொண்டு போய் விட்டுருவேன் நீ சாப்பிட்டு கிளம்புடா அப்புடின்னு அம்மா சொன்னாங்க .
போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் இரண்டு பேர் தனியாக சென்று ஏதோ பேச
டே இங்க வா என மூர்த்தி யை அழைத்து நான் சொல்லுற மாதிரி எழுது ,சார் சொல்லுங்க பத்து நாட்களுக்குள் லலிதா என்ற பெண்ணை கொண்டு வந்து ஸ்டேஷன் யில் ஒப்படைக்கிறேன் என எழுதி கொடு
அய்யா அந்த பொண்ணு எங்க இருக்குன்னு எனக்கு தெரியாது
அப்புடி இல்லைன்ன யோவ் ஏட்டு
இவன் ஆட்டோவை சீஸ் பண்ணி உள்ள வையா
மூர்த்தி அரண்டுபோனான்
சார் நீங்க சொல்லுறபடி எழுதி தரேன்
அதே போல அடுத்த வாரம் விசாரணைக்கு எங்க ஊர் sp calculator கனகாம்பரம்
அய்யாவ ஆபீஸ்ல வந்து சந்திக்கணும் .
மூர்த்தி மனது படபடத்தது ,ஸ்டேஷன் ஐ விட்டு மூர்த்தி புறபட்டான் ,அவனின் மனது காலையில் அவன் ஆட்டோவை
கிராஸ் செய்த பூனை தான் அவன் கண்முன்னே ஓடியது
என்ன இப்படி பட்டுன்னு முடிச்சுடிங்க .. அடுத்த பார்ட் போட்டதும் சொல்லுங்க சார்..
ReplyDeleteவணக்கம் சுதர்சன் சார் கதை இன்னும் முடியல இதுதான் ஆரம்பம் இது ஒரு உண்மை சம்பவத்தின் பின்னணி கமென்ட் போட்டதற்கு மிக்க நன்றி .பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ReplyDelete