Pages

Sunday, March 27, 2011

வியாபாரம்

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பெங்களூர் சென்றிருந்தேன், என்னுடன் வந்திருந்த நண்பர் சாலை ஓரத்தில் சட்டை துணி  விற்று கொண்டிருக்கும் வியாபாரிகளிடம் சென்று விலை கேட்டார் ,விலை கேட்ட
 நண்பருக்கு 
கடுமையான அதிர்ச்சி  ஒரு சட்டையின் விலை  ரூபாய்  20  மட்டுமே . நானும்
ஆச்சர்ய பட்டேன் . இருப்பினும் நான் எனக்கு எதுவும் வேண்டாம் என விலக நண்பர் தனக்கு நான்கு சட்டைகளை வாங்கினார் .அந்த வியாபாரம்
நடை பெற்று கொண்டிருக்கும் நேரம் இரவு எட்டு மணி இருக்கும் . வியாபாரம் நடைபெற்ற கடையில் எரிந்து கொண்டிருந்தது காண்ட விளக்கு மட்டுமே ..நண்பர் எடுத்து கொடுத்த சட்டைகளை கடைக்காரர் வேகமாக வாங்கி ,இன்னொரு நபரிடம் இதை பார்சல் செய் என வேகமாக எறிந்தார் .பார்சல் திரும்பி வந்தது ,பார்சல் என்றால் ,பெரிய அளவில் எதுவும் கிடையாது சாதாரண கருப்பு பிளாஸ்டிக் பையில் இறுக்கி முடிச்சு இடப்பட்டிருந்தது . நண்பர் துணி வாங்கிய சந்தோசத்தில் பேருந்தில் புறப்பட ,மறுநாள் காலை நான் மறக்காமல் நண்பர் எழுந்ததும் ,உங்களுடைய புது சட்டையை எடுங்கள் பகலில் பாப்போம் என கூற நண்பரும்  ஆர்வத்துடன் பார்சல் இ பிரிக்க உள்ளே இருந்தது எல்லாம் பழைய 
கிழிந்த சட்டைகள் ,நண்பரின் முகமோ   பேய் அறைந்தது போல் இருந்தது.பெங்களூர் வாசிகளுக்கு  இது போன்ற  கடை பற்றி    நன்கு தெரியும்.

No comments:

Post a Comment