காட்டில் வாழக்கூடிய மிருகங்களில் அதிக விஷத்தன்மை உள்ளது எது எனில் பாம்பு என்று தான் சொல்ல வேண்டும்.பாம்புகளில் பல வகைகள் உள்ளன.என்னுடைய வாழ்வில் பாம்பை வார வாரம் வெள்ளிகிழமை அன்று பார்க்க வாய்ப்பு கிடைக்கும் .என்னடா லூசு மாதிரி சொல்லுறேன்னு நினைக்காதிங்க . கோவிலுக்கு போற ஆளு நான் கிடையாது .கடவுளை உள்ளத்தில் வைத்து வணங்குபவன் நான் .அப்புறம் எப்புடிடா இவன் வார வாரம் பாம்பை பார்பான்னு உங்களுக்கு ஒரு யோசனை வரும் .அதெல்லாம் சும்மாங்க வெள்ளிகிழமை அன்று எங்க ஊரில் சந்தை.
ஒவ்வொரு வெள்ளி அன்றும் பாம்பாட்டி பம்பை வைத்து வித்தை காட்டுவதை பார்த்திருப்போம் .பாம்பாட்டி வித்தை காட்டும் போது ஒரு முட்டையை நம்ம கண்ணு முன்னாடியே மறைய செய்வான் .அத நீங்க பார்த்திருப்பிங்க அது எப்புடி சாத்தியம் .அப்போ பாம்பாட்டிக்கு மந்திரம் தெரியுமா,அதெல்லாம் கிடையாது வெறும் தந்திரம் தான் .அந்த தந்திரத்தோட விளக்கம் உங்களுக்கு தெரியுமா ?முட்டையை ஒரு பையில் வைப்பான் .அதற்க்கு பின்னர் தான் முட்டை மறையும் .ஒவ்வொரு ஷோ நடைபெறும் முன்னர் பாம்பாட்டி
முட்டையின் உள்ளே உள்ள மஞ்சள் கரு மற்றும் வெள்ளை கருவை சிறு ஓட்டை
அமைத்து straw மூலம் உறிஞ்சி விடுவார்கள். மீதம் அந்த முட்டையில் இருப்பது
வெறும் ஓடு மட்டும் தான் . துளை இடப்பட்ட பகுதியை நன்கு ஒரிஜினல் முட்டை போல் பேஸ்ட்
ஐகொண்டு ஒட்டி விடுவார்கள் .மேலும் அந்த ஷோ வில் பங்கு பெரும் நபர்கள் அவர்களுடைய ஆட்கள்தான் .பையின் உள்ளே மற்றொரு ரகசிய பை இருக்கும் .அதன் உள்ளே முட்டையை வைத்து
பையை பிடித்து கசக்கும் பொழுது உள்ளே உள்ள முட்டை shape பையின் shape எப்படியோ அதுபோல் மாறும் மேலும் உள்ளே உள்ள ரகசிய பையில் இருப்பதால் வெளியில் தெரியாது .
No comments:
Post a Comment