கிராம மக்களின் பொழுது போக்குகளில் ஒன்றான சேவல் சண்டையை மையமாக கொண்ட படம் தான். ஆடுகளம்,ஆழகான கதா நாயகியை ஒரு சில பாடல்களில் மட்டுமே அவருக்கு முக்கிய துவம் கொடுத்து,குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால்,படம் முழுவதுமே சேவல் சண்டை தொடர்பாக இருந்ததே தவிர நடிகை டாப்சியை முற்றிலும் பயன் படுத்தவில்லையே என்ற ஏக்கம் படம் பார்பவர்களுக்கு இருக்கும் . .நாயகன் தனுஷ் க்கு ஆடுகளம்,சிறந்த வெற்றிக்களம்,என்று தான் சொல்லவேண்டும் .பாடல் யாத்தே !யாத்தே மிக அருமை. படம் பார்த்து விட்டு வெளியில் வருவோர் காதுகளில் எல்லாம் யாத்தே !யாத்தே !பாடல் ஒலித்து கொண்டே இருக்கும். அவ்வளவு அருமையான பாடல் .கதையின் அம்சம் என்னவென்றால் சேவல் சண்டைக்கு சேவல்களை தயார் செய்து, களத்தில் விடுவது, அதில் மிகுந்த கில்லாடி பேட்டைகாரர். அவருடைய அணிக்கும் எதிர் அணிக்கும் நடக்ககூடிய சேவல் சண்டையில் வெற்றி பெறுவது பேட்டைகாரர் அணிதான்.பேட்டைகாரர் அணியில் இருப்பவர்களில் ஒருவர் தான் தனுஷ் . தனுஷ் நடிப்பு படு சூப்பர் !கதை சொன்னால் சுவாரசியம் கெட்டுவிடும். சண்டை காட்சி அற்புதம், அழகான நாயகி ,பார்க்க வேண்டிய படம்,தனுஷ் நடிப்பு அட்டகாசம்.
No comments:
Post a Comment