ஒரு கல்யாண ப்ரோக்ராம் அட்டென்ட் செய்ய திருப்பூர் செல்ல வேண்டி இருந்தது .
நம்ம கோஸ்டி மக்கள் எல்லாம் திருச்சி இல் இருந்து TRAIN புடிச்சு திருப்பூர் போக முடிவு செய்தோம்.புதுக்கோட்டையில் இருந்து பஸ்சில் திருச்சிக்கு போனோம்.
நேரமாகி விட்ட காரனத்தால ரயில் வே ஸ்டேஷன் செல்ல மெயின் ரோட்டில் இருந்து ஸ்டேஷன் செல்ல குறுக்கு வழியில் திடு திடு இன்னு ரயில் வே பிளாட் பார்மில் வேகமாக ஓடினோம்.நான் கோஸ்டி அப்புடின்னு குறிப்பிட்டு இருப்பது
10 பேர் கொண்ட குழு ஆகும்.நாங்க ஓடிய வேகத்தை வெளியில் உள்ள யார் பார்த்தாலும்
ஏதோ கலவரம் போல தெரியும் . ஏன்ன TRIAN யில் பயணம் செய்ய டிக்கெட் எடுக்கணும்
மேலும் புறப்பட தயார உள்ள TRAIN இல் பயணம் செய்ய இடம் பிடிக்கணும் என்ற
வேகம்.நாங்க ஓடி வந்த வேகத்தை பார்த்த டி டி ஆர் எங்க எல்லோரையும் பார்த்து
எந்த TRAIN இல் இருந்து தப்பி ஓட பாக்குறீங்க உங்களோட டிக்கெட் எங்கே காமிங்க
என்றார் ,சார் இனிமே தான் திருப்பூருக்கு டிக்கெட் எடுக்கணும் என்றோம்.பிளாட் பாம் டிக்கெட் இருக்க அப்புடின்னு இன்னொரு கேள்விகனையை நம்ம மேல தொடுத்தார்.இல்ல சார் என்றதும் ௨௦௦௦ ரூபாய் பைன் கட்டிட்டு போங்க என்றார்
பதிலுக்கு.வழிப்பறி கொள்ளையனை விட கேவலமாக ஒரு சில நபர் களிடம் இருந்து
பணத்தை வாங்கிய பின்னரே TRAIN இல் செல்ல அனுமதித்தார் .பாவம் அது அவரோட கடமை இது நம்ம தலையில் எழுதிய விதின்னு புறப்பட்டோம் .
No comments:
Post a Comment