Pages

Saturday, January 22, 2011

படியில் பயணம் நொடியில்

படியில் பயணம் நொடியில் மரணம் என்ற வாசகத்தை படித்திருக்கலாம் . ஆனால் பஸ் பாடி பில்டிங் செய்யும் இடத்திற்கு சென்று படி எவ்வாறு அமைக்கப்படுகிறது   எனபார்த்தால் தான் அதன் உண்மையான அர்த்தம் உங்களுக்கு விளங்கும்,நான்கு மாதங்களுக்கு முன்னர் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில்
இருந்து வெளியில் புறப்பட்ட பேருந்து,பேருந்துநிலையம் எதிரில் உள்ள நேஷனல் 
lodge அருகே வரும் பொழுது,பேருந்தின்  பின்புறம் படி உடைந்து அதில் நின்ற  வர்கள் காயம் இல்லாமல் தப்பித்தனர்.அந்த இடத்தில் ஸ்பீட் breaker  இருந்ததால்.பேருந்தின் வேகம் குறைந்து பயணிகள் தப்பினர் .பேருந்தில் அமைக்கப்பட்டிருக்கும்  படி மக்கள் உள்ளே ஏறி செல்ல மட்டுமே தவிர அதில் நின்று பயணம் செய்ய அல்ல .ரொம்ப   பேர் படியில்  நின்று கொண்டு  படியை ஒட்டியுள்ள கைபிடியை இறுக பற்றி பேருந்தின் வெளியே 
தொங்குவதை பார்க்கலாம் .அந்த கை பிடி எந்த சப்போர்ட் இல் இருகின்றது என்றால் 
மிக சாதாரணமான  போல்ட்  தான்.  அந்த போல்ட் சப்போர்ட் போக போக குறையும் ,போல்ட் லூசாக இருக்கும் பட்சத்தில் கைபுடி பிடுங்கி கீழே விழ வேண்டியதுதான்.படியில் பயணம் செய்வதை தவிர்த்து விடுவது உத்தமம் .

No comments:

Post a Comment