தலை தெறிச்சு வந்த தரகரை பார்த்து சாமியார் சொன்ன பதில்.கல்யாணம் பண்ணி
கூட்டி கிட்டு வருகின்ற மருமகள் நைட் பாயை விறுச்சு படுத்த பின்னர் ,மாமியார் ஏம்மா மத்தியானம்
மாடியில் காய போட்ட வடகத்தை எடுத்தாச்சா ?, அத்தை எல்லாம் அப்பவே எடுத்தாச்சு
அத்தை. ஏம்மா மீதம் உள்ள பாலை உரை ஊத்தியாட்சா? அப்பவே ஊதியாச்சு அத்தை.
ஆமா மாடி மேல துணி காய போட்டியே எடுத்தாட்சா ? எடுத்தாச்சு அத்தை . இப்புடி மாமியார் கேட்கின்ற கேள்விக்கு படுத்த பாயை விட்டு எழாமல் பதில் சொல்லும் சமத்தான மருமகள் தான் தனக்கு வேணும்முன்னு ஆச்சி சொல்லி இருக்காங்க.
தரகர் தன்னோட இன்னொரு குழப்பத்தையும் சொல்லி அதற்கும் விளக்கம் கேட்டார் . தன்னோட மகனை பத்தி சொல்லும் பொழுது உட்கார்ந்தா உட்கார்ந்த இடத்தை விட்டு எளுந்திருக்கமாட்டன் அப்புடீன்னு சொன்னகளே அதுக்கு என்ன
அர்த்தம் சாமியாரே ?அதாவது உயர் பதவியில் உள்ளவங்க யாருக்ககாகவும்
எழுந்து நின்னு பதில் சொல்ல தேவை இல்லை, தன்னோட மகன் பெரிய வேலையில் இருக்கிறதா ஆச்சி சொல்லி இருக்காங்க.இது எப்புடி இருக்கு ?
No comments:
Post a Comment