Pages

Sunday, December 5, 2010

ATM கார்டு

வங்கியில் கணக்கு வைத்து கொள்வது என்பது இன்றைய காலகட்டத்தில் அவசியமான மற்றும் அத்தியாவசியமானது ஆகும் .கணக்கு வைத்துள்ள நபர்கள் ATM கார்டு வாங்கி கொண்டால் பணம் எடுப்பது மிக சுலபமாக இருக்கும் .ATM  கார்டு ஐ பயன் படுத்தும் பொழுது அதாவது  கார்டு மெசின்   உள்ளே  சென்றவுடன்   ,உங்களின் ரகசிய பின் நம்பர் ஐ கேட்கும் அதன் பின் நீங்கள் எடுக்க வேண்டிய  தொகையை கேட்கும் ,எடுக்க வேண்டிய தொகையை குறிப்பிட்ட பின் பணம் ATM மெசின்இல் இருந்து வெளியில் வரும் .பணம் வெளியில் வந்தவுடன் தொகையை எடுத்து விடவேண்டும் ,பணத்தை எடுக்காமல் தாமதிக்கும் பட்சத்தில் அதாவது ,WOULD YOU LIKE TO do ANOTHER TRANSACTION என கேட்கும் MACHINE இல் இருந்து வெளியில் வரும் பணத்தை எடுக்காமல் YES என்றோ NO  என்றோ அழுத்தும் பட்சத்தில் பணம் திரும்ப உள்ளே சென்று விடும் ,அப்புறம் பேங்க் மேனேஜர் நமக்கு நல்லா பழக்கம் ஆகிடுவார்,ஏன்ன உள்ளே போன பணத்தை குறிப்பிட்ட  வங்கியின் மேனேஜர் வசம் தான் புகார் கொடுத்து பெற வேண்டும் .மக்கள்  ATM  CENTER உள்ளே சென்றவுடன் கவனத்தை முற்றிலும் பணம் எடுப்பதில் மட்டுமே செலுத்த வேண்டும் .

No comments:

Post a Comment