Pages

Monday, April 25, 2011

வரமா ?

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். அது உண்மையில் வரமா ? இல்லை  சாபமா ?அப்புடின்னு பார்க்கலாமா .1998  ஆம் வருடம் ,எனக்கு  {இப்புடி வருசமெல்லாம் சொல்லி ஆரம்பிகின்றேனே ஏதோ முக்கியமான வரலாற்று சம்பவத்தை தான் சொல்லே போறேன்னு நீங்க நினைக்கலாம் }எyனக்குஎனக்கு எனக்கு ny25 வயது  இருக்கும்   பொழுது பெண் பார்க்கும் படலம் ஆரம்பம் ஆனது.{ கழுதை தேஞ்சு கட்டேரும்பு  ஆன கதை அப்புடின்னு மக்கள் பேசுறதை நீங்க பார்க்கலாம் அது என்னங்க அதற்க்கு விளக்கம் கதையை நல்ல கவனிங்க }


வத்தலகுண்டு ல் இருந்து ஒரு பெண்ணின் ஜாதகம் வந்தது . முதன் முதலாக பெண் பார்க்க போகிறோம் என ஆயிரம் கனவுகளோடு வத்தல
குண்டிற்கு செல்ல வாடகை டாட்டா சுமோ ஏற்பாடு செய்தேன் .

பெண்ணோட ஊருக்கு{வத்தலகுண்டு)  போன பின்னாடி தான் தெரிஞ்சது நான் குண்டு அந்த பொண்ணு வத்தல் அப்புடின்னு  தெரிந்தது. கருப்பான பொண்ணு வேணாம் அப்புடின்னு ரொம்ப கோபமா வாடகை டாட்டா சுமோ வில் புறப்பட்டு புதுக்கோட்டை வந்தோம் . (என்னடா இவன் அடிக்கடி சுமோ சுமோ அப்புடின்னு சொல்லறன்னு நீங்க நினைக்கலாம் அது தானே சாமி கதையோட கரு }


அடுத்தபடியாக புதுகோட்டை அருகில் உள்ள முள்ளூர் ல் இருந்து ஒரு ஜாதகம் வந்தது  .ஜாதகம் பார்த்தோம் பொருத்தம்  இருந்தது . சரி போய் பொன்னை பார்போம் என மீண்டும் வாடகை டாட்டா சுமோ ஏற்பாடு செய்தேன் .


முள்ளூர் சென்று பெண் பார்த்தோம் ,பெண்ணை பார்பதற்கு முன்னால் இந்த பெண் ஜாதகத்தை கொடுத்த நபரை அடித்து விடலாமா என்ற  சிந்தனை பெண் வீட்டில் உட்கார்ந்து இருந்த பொழுது தோன்றியது .காரணம் என்ன என்றால் அந்த வீட்டில் இருந்தவர்கள் எல்லாம்  சுத்த பட்டிகாட்டு ஜனங்களா இருக்கின்ற மாதிரி  உணர்வு என் உள்ளே ஏற்பட்டது . பொண்ணு அசிங்கமா இருக்குமோ அப்புடின்னு நினைத்தால் அதற்க்கு நேர்மாறாக பொண்ணு சூப்பர் ஆக இருந்தது.


என்ன  தான் பொண்ணு சூப்பர் ஆக இருந்தாலும் பொண்ணுக்கு என்னை பிடிக்கணும் இல்லிங்களா , பாவம் பொண்ணு 
அழுதுகிட்டே இருந்துச்சு  {அந்த பொண்ணு மனசுல என்ன இருக்குன்னு யாருக்கு தெரியும் }


அடுத்தபடியா புதுக்கோட்டை  மச்சுவாடி ல்  இருந்து ஒரு பெண் ஜாதகம் வந்தது. 

மச்சுவாடி நோக்கி அந்த பொன்னை பார்க்க ஆட்டோ  வில் புறப்பட்டோம் . பொண்ணு நல்லா இல்லாததால் வேண்டாம் என தீர்மானித்தோம்.


6  மாத காலத்திற்கு பின்னர் திருச்சி ல் பெண் இருப்பதாக சொல்ல பஸ்சில்  சென்று பெண் பார்த்தேன் .நல்வேளை.  நடந்து சென்று பெண் பார்க்க வேண்டிய படலம் இல்லாமல் தப்பித்தேன்.

1 comment:

  1. Hello! It´s a nice website. Congratulations for your wok. Visit me too:
    http://nelsonsouzza.blogspot.com
    have a nice day!

    ReplyDelete