Pages

Monday, April 25, 2011

சுனாமி

ஒரு அவசர வேலை காரணமாக நானும் அண்ணனும் சென்னை சென்று இருந்தோம் .அண்ணன் அவர்களின்  பெயரை சொல்ல  விட்டாலும் ,அவரை பற்றி ஒரு சில செய்திகளை சொன்னால் மட்டுமே கதை சுவாரசியமாக இருக்கும் . எப்பொழுதும் மிகவும் சுத்தமாக இருக்க நினைப்பவர் அண்ணன், சென்னைக்கு செல்லும் பொழுது நண்பரின் காரில் வந்தோம் புறப்படும் பொழுது ,பஸ்சில் வராமல் ட்ரெயினில் புறப்பட நினைத்தோம். என்னுடைய கையில் ஒரு traveL  bag  இருந்தது ,அதே போல் அண்ணன் கையில் ஒரு சூட் கேஸ் இருந்தது .சூட்  கேஸ் மேல் உரை போட பட்டு இருந்தது. டிக்கெட் புக் செய்யாததால் . un reserved  ticket எடுத்தோம்.

train புறப்படும் நேரம் ட்ரெயின் வரும் இடத்தில் நானும்  அண்ணனும்,unreserved
compartment  நோக்கி சென்றோம். மிக வேகமாக வந்து நின்றது பல்லவன் எக்ஸ்பிரஸ் ,சரியான கூட்டம்,நிச்சயம் train உள்ளே ஏறுவது கடினம் என என்னுடைய மனசாட்சி சொல்லியது, என்ன செய்வது முயற்சி செய்வோம்.
என கூட்ட நெரிசலில் train உள்ளே ஏற காலடிஎடுத்து வைத்தோம்  சுனாமி வந்தால் எப்படி மக்கள் தலை
 தெறிக்க ஒடுவார்களோ அதே போல் train  உள்ளே மக்கள் ஓட  அண்ணனின் கையில் இருந்த  suitcase  திடீரென  ட்ரைன் உள்ளே போய் விழுந்தது ,suitcase  உள்ளே போன அவசரத்தில்,அண்ணனும் கஷ்டப்பட்டு உள்ளே செல்ல காலை எடுத்து train உள்ளே வைக்க, கூட்டம் சத்தம் இன்றி
அண்ணனை உள்ளே தள்ளியது .ஆகா அண்ணன் உள்ள போய்ட்டார் அப்புடின்னு நானும் கஷ்டப்பட்டு உள்ளே ஏற ,பிழைத்தால் போதுமென
கிடைத்த இடத்தில் அமர்ந்து அண்ணனுக்கு போன் செய்து என்னுடைய
இடத்தில் அருகில் அமர அழைத்தேன் .நான் ஏற்கனவே உங்களிடம் குறிப்பிட்டு
இருந்தேன் அண்ணன் ரொம்ப சுத்தம் பார்க்கிறவர் என்று . .அண்ணனை   பார்கிறேன்
பார்த்தால் அவருடைய சட்டை பட்டன் இரண்டை காணவில்லை .அண்ணே என்ன ஆச்சு என கேட்க கூட்டத்தில் பட்டன் அறுந்து போச்சு என்றார் .அண்ணே உங்க suitcase ஐ
கொடுங்க மேலே வைக்கலாம் என கேட்டேன் ,suitcase

ஐ வாங்கி பார்த்தால் suitcase  கவர் இல்லை எங்கே  என்றேன் .யாருக்கு தெரியும் நல்லவேளை suitcase  ஆவது இருந்ததே என்றார் . பாவம் அண்ணனை  கூட்டம் அசுத்த படுத்தி  விட்டது .

1 comment:

  1. நல்லவேளை suitcase ஆவது இருந்ததே !

    ReplyDelete