கடுமையான புயல் காற்று போல் பலமான காற்றுவீசியது நகரமே
நடுங்கி போனது .ஆளையே தூக்கும் அளவிற்கு அப்புடி ஒரு பலமான காற்று.வியாபார கடைகளில் வெளியில் நிப்பாட்டி வைத்திருந்த ஸ்டான்டிங் போர்டு அத்தனையும் சினிமாவில் வரும் காட்சிகளை போல் பறந்தது.சைக்கிள்கள் பறந்தன , அதனை தொடர்ந்து கடுமையான இடி மின்னல் புயல் புதுக்கோட்டை மக்கள் அனைவரும் இயற்கை அன்னை ஏதோ ஊரு விளைவிக்க போகிறாள் என அச்சத்தோடு வான மகளை பார்க்க ,திடீர் ,திடீர் என இடிகளை போட்டு, மெதுவாக ஆரம்பம் ஆனா மழை,தொடர்ந்து பெய்ந்து ,சூட்டை கிளப்பியது.கடுமையான கோடைகாலத்தில் பெய்ந்து
குளங்களை நிரப்பும் .அருமையான மழை புதுக்கோட்டை நகரமே
௨ மணி நேரம் இருளில் மூழ்கியது.
No comments:
Post a Comment