ஸ்கூல் அட்மிசன் துவங்கியதும், தாலுக்கா அலுவலகம் கலை கட்ட துவங்கியது.ஏன் என்றால் ,மாணவர்களுக்கு சாதி சான்றிதல் வேண்டி
விண்ணப்பங்கள் குவிந்தவண்ணம் உள்ளது .எனது நண்பரின் மகனுக்காக சாதி சான்றிதல் பெற விண்ணப்பம் பூர்த்தி செய்து ,உரிய அதிகாரியிடம் கையெழுத்து
வாங்கி சான்றிதல் பெற தேவையான ஆவணங்களை அதன் உடன் இணைத்து தாலுக்கா அலுவலகத்தில் உள்ள பெட்டியில் போடுமாறு அலுவலக ஊழியர் சொல்ல ,அதன்படி பெட்டியின் உள்ளே விண்ணப்பத்தை போட்டு, ஐந்து நாட்கள் கழித்து சான்றிதல் பெற திரும்ப அலுவலகம் சென்றோம்.உங்களது சான்றிதல் இல்லை என்றனர் அலுவலக உழியர்கள் .ஏன் என்று கேட்டால் உங்களது விண்ணப்பம் காணமல் போய் இருக்கலாம், இல்லை எனில் உங்களது விண்ணப்பம் நிராகரிக்க பட்டிருக்கலாம் என்றனர் ,அலட்சியமாக ,நிராகரிப்பு செய்ய வேண்டும் எனில் ,நாம் உரிய ஆவணம் வைக்காமல் இருந்தால் நிராகரிப்பை ஏற்று கொள்ளலாம்.VAO கையெழுத்து போடும் பொழுது உரிய ஆவணம் இணைக்கப்பட்டதை சரி பார்த்த பின்னர் தான் கையெழுத்து போடுவார் என்பது உலகம் அறிந்த உண்மை .சரி பார்க்கப்பட்ட
ஒரு விண்ணப்பம் காணமல் போவது என்பது நிர்வாகத்தின் சீர் கேட்டை
வெளிபடுத்தும் அவலநிலை ஆகும் . நண்பர் மீண்டும் புதிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மீண்டும் உரிய அலுவலரிடம் கையெழுத்து பெற்ற பின்னர் ,இரண்டு நாள் கழித்து தான் சாதி சான்றிதல்
கிடைத்தது .
No comments:
Post a Comment