தென்னையை பெற்றால் இளநீரு !பிள்ளையை பெற்றால் கண்ணீரு !என்ற வாசகத்தை படித்திருப்போம். அது தொடர்பான செய்தியை பார்போமா.தமிழகத்தில் இயங்கிகொண்டிருக்கின்ற முன்னணி பள்ளிகளில் ஒன்றான ஒரு உயர்நிலை பள்ளிக்கு நண்பரின் மகனின் பள்ளி சேர்க்கைக்கு சென்றிருந்தேன் . காலை ஒன்பது மணிக்கு பள்ளியின் உள்ளே சென்றோம் .சரியான கூட்டம் , பெற்றோர்கள் குழந்தைகள் என எல்லோரும் காத்திருக்க பள்ளியின் நிர்வாகம் ,வந்திருந்த யாரிடமும் சரியான மரியாதை கொடுக்கவில்லை. நாங்களும் அவர்களிடம் இருந்து மரியாதை எதுவும்
எதிர்பார்காவில்லை.சரியான வெயில் குடிப்பதற்கு தண்ணீர் இல்லை .
சுமார் பத்தரை மணி அளவு ஒரு ஆசிரியை வந்தார் ,பெற்றோர்களை நோக்கி
குழந்தைகள் ஒரு வரிசையில் நில்லுங்கள் ,பெற்றோர்கள் ஒரு வரிசையில் நில்லுங்கள் என ஆணை இட்டார் , அந்த ஆசிரியை சொன்னதும் ஓடி அடித்து பெற்றோர் ஒரு வரிசையில் நின்றனர் ,பெற்றோர்கள் குழந்தைகளை நோக்கி ஓடு சீக்கிரம் வரிசையில் நில்லு என ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளிடம் கட்டளை இட, குழந்தைகள் தனி வரிசையில் ஓடி அடித்து பிடித்து நிற்க . மற்றொரு ஆசிரியை வரிசையில்
நின்றவர்களை நோக்கி யாரும் இங்கு நிற்க வேண்டாம் ,குழந்தைகள் மட்டும் அதோ அந்த மரத்தடியில் போய் நில்லுங்கள் என கட்டளை இட
மீண்டும் குழந்தைகள் பதறியடித்து மீண்டும் வேறு ஒரு இடத்திற்கு ஓட ,
அங்கு நின்ற ஒரு ஆசிரியை இங்கு நிற்க வேண்டாம் எல்லோரும் உட்காருங்கள் என குழந்தைகளை நோக்கி கட்டளை இட குழந்தைகள் ஓடி அடித்து கீழே அமர்ந்தனர் .குழந்தைகள் அமர்ந்த இடம் கடும் வெயில் .
அங்கு நின்ற ஒரு ஆசிரியை இங்கு நிற்க வேண்டாம் எல்லோரும் உட்காருங்கள் என குழந்தைகளை நோக்கி கட்டளை இட குழந்தைகள் ஓடி அடித்து கீழே அமர்ந்தனர் .குழந்தைகள் அமர்ந்த இடம் கடும் வெயில் .
திடிரென அங்கு வந்த ஒரு ஆசிரியை குறிப்பிட்ட பள்ளியின் பெயரை சொல்லி அந்த பள்ளியின் மாணவர்கள் மட்டும் இந்த வரிசையில் அமருங்கள் என சொல்ல இதர பள்ளிமாணவர்கள் எங்கே நிற்பது என விழித்தனர்.
மணி பனிரெண்டு ஆகிவிட்டது ,குறிப்பிட்ட பள்ளியில் படித்தவர்கள் மட்டும் சேர்க்கைக்கான விண்ணப்பம் கொடுத்தார்கள் . விண்ணப்பம் கொடுத்த பின்னர் சிஸ்டரை பாருங்கள் என்றனர். அதாவது சிஸ்டரை பார்த்த பின்னர் அவர் ஒரு சீட்டில் கையெழுத்து போடுவார் ,அதன் பின்னர் ,மற்றொரு சிஸ்டர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்வார். அதன் பின்னர் பணம் கட்ட வேண்டும் ,இது அவர்கள் புதிய சேர்கை செய்யும் முறை.இதர பள்ளியில் இருந்து வந்த மாணவர்களை கடைசி வரை பள்ளியில் முறையான பதில் கூறவும் இல்லை .சேர்கை அனுமதிக்கான
No comments:
Post a Comment