Pages

Sunday, May 15, 2011

ஒயின்


திராட்சைக்கு பெயர் போன பண்டைய பாரசிக நாட்டில் பதப்படுத்துவதற்காக பெரும் பெரும் ஜாடிகளில் சேகரித்து வைக்கப்பட்டிருத்த திரட்சைப் பழங்கள் ஒரு முறை அழுகி  புளித்து காடி போன்ற திரவமாகி கசிந்தது    தீய சக்திகளால் விசமாக மாறிவிட்டது என்று கருதி அதை அப்புறப்படுத்துமாறு பாரசிக மன்னர் கட்டளை இட்டார் .


இந்நிலையில் வாழ்க்கை வெறுத்து போன கிழவி விசமென நினைத்து அதை குடித்தார் .உடனே உடலில் ஒரு வித உற்சாகம் .மேலும் மேலும் குடிக்கவே மயங்கி கிழே சரிந்தார் .ஆனாலும் சாகவில்லை அந்த மூத்த குடிமகள் மயக்கம் தெளிந்த பின் 
அரசவைக்கு சென்ற அந்த பெண் நடந்ததை கூற .அரசவையில் உள்ளவர்கள் 
அந்த ஜாடி திரவத்தை குடித்து பார்த்து விட்டு அதற்க்கு ஒயின் என்று பெயர் சூட்டினர் .பண்டைய பாரசீக மொழியில் ஒயின் என்றால் மகிழ்ச்சி தரும் விஷம் 
என்று பொருள் .விஷம் மகிச்சி தருமா ? என்று கேள்வி கேட்ககூடாது . மதுவால் ஏற்படும் பாதிப்புகளை பார்க்க வேண்டும் .


 

No comments:

Post a Comment