ஒரு மனிதனை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால்,அவன் யாருடன் நட்பாக இருக்கிறானோ அவனுடைய குணநலன்களை பற்றி தெரிந்தாலே,நாம் தெரிந்து கொள்ள வேண்டிய மனிதனின் குணத்தை புரிந்து கொள்ளலாம். நட்பு யாருடன் வைத்து கொள்ளலாம் யாருடன் நட்பு வைக்க கூடாது என்பதை தெரிந்து கொள்ளவேண்டும்.
ஒரு நகரத்தில் முல்லா என்ற பணக்காரன் வசித்து வந்தான். முல்லாவிற்கு அவன் நடத்திகொண்டிருக்கும் ஜவுளி கடை மாபெரும் வருமானத்தை ஈட்டி தந்தது. அதே ஊரில் அக்பர் என்ற ஏழை வாழ்ந்து வந்தான். அருகில் உள்ள நகரத்திற்கு சென்று மொத்தமாக ஜவுளிகளை வாங்கி கடை வீதியின் தெருக்களில் வைத்து விற்பான். அக்பரிடம் மக்கள் அதிகமாக ஜவுளிகளை வாங்க முல்லா வின் வியாபாரம் சிறுக சிறுக சரிந்தது. அக்பரின் வியாபாரம் அமோகமாக சென்றது.
அக்பரின் செயலால் வியாபாரத்தை இழந்த முல்லா வுக்கு ஒரு யோசனை தோன்றியது. அக்பரை தனது வியாபாரத்தில் ஒரு பங்குதாரராக இணைத்து கொண்டால்,இழந்த வியாபாரத்தை மீண்டும் பிடிக்கலாம் என முடிவு செய்து,முல்லா தனது வேலை ஆளை அனுப்பி அக்பர் ஐ அழைத்து வர சொன்னான் .
அக்பர் நேரில் வந்ததும் முல்லா தனது விருப்பத்தை வெளிபடுத்தினார்.
முல்லாவின் கருத்தை கேட்ட அக்பர் நாளை தனது விருப்பத்தை வெளிபடுத்துவதாக தெரிவித்து சென்றார்.
இரவு வீட்டிற்க்கு சென்ற அக்பர் முல்லா சொன்ன கருத்துக்களை மனதில் அசை போட்ட படியே கண் அயர்ந்து விட்டார். இரவு தூக்கத்தில் அக்பருக்கு ஒரு கனவு வந்தது .கனவில்.....................
ஒரு காட்டில் சிங்கம் ஓன்று வசித்து வந்தது.சிங்கம் ஒரு நாள் மான் ஒன்றை வேட்டை ஆடியது .தான் வேட்டை ஆடிய இரையை தின்று கொண்டு இருந்தது, அப்பொழுது அங்கு வந்த கழுகு சிங்கத்தை நோக்கி நாம் இன்று முதல் ஓர் ஒப்பந்தம் செய்து கொள்வோமா, என்று கேட்டது, என்ன ஒப்பந்தம் அது சொல் என்றது சிங்கம், நீர் காட்டுக்கு அரசர் ,நானோ ஆகாயத்துக்கு அரசன் நாம் இருவரும் தினமும் கிடைக்க கூடிய இரையை பகிர்ந்து கொள்வோம் என்றது .சிங்கம் சிறிது நேரம் யோசித்தது ......... கழுகை நோக்கி சிங்கம் நீ நினைத்தால் என்னை எழுத்தில் சந்தித்து விடலாம் ஏனெனில் நான் பூமியில் வசிப்பவன் ,ஆனால் நீயோ ஆகாயத்தில் பறப்பவன் .நான் நினைக்கும் நேரம் உன்னை சந்திக்க முடியாது . நீ நினைக்கும் நேரம் என்னை சந்திக்கலாம் ஏனெனில் நான் பூமியில் இருப்பவன் .ஆகையால் நம்முடைய நட்பு கூடா நட்பு. என்று சொன்னது.
கனவில் இருந்த அக்பர் விழித்து பார்த்து இந்த கனவின் மூலமாக தான் செய்ய இருந்த வியாபார ஒப்பந்தத்தை வேண்டாம் என அல்லா உணர வைத்து விட்டார் என்பதை புரிந்து முல்லாவிடம் சென்று அய்யா நான் என்னுடைய பாதையில் நான் செல்கிறேன் ,உங்களுடைய பாதையில் நீங்கள் செல்லுங்கள் என்று கூறி தெருவை நோக்கி புறப்பட்டான் அக்பர்.
No comments:
Post a Comment