Pages

Thursday, May 19, 2011

ADMK க்கு மகத்தான வெற்றியை அளித்தமைக்கு அன்புடன் நன்றி தெரிவிக்க வேண்டும்

புரட்சி தலைவி அம்மா அவர்கள் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மற்றும் வாய்ப்பை இழந்தவர்களும் தொகுதி மக்களை சந்தித்து எளிமையான முறையில் நன்றி தெரிவிக்க வேண்டும் என தமிழக முதல்வர் மாண்புமிகு அம்மா தெரிவித்துள்ளார். மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொழுது சம்மந்தப்பட்ட பகுதியின் கழக நிர்வாகிகளை அழைத்து சென்று அன்புடன் நன்றி தெரிவிக்க வேண்டும்.ஒவ்வொரு நகர ,ஒன்றிய ,நிர்வாகிகளையும் உடன் அழைத்து
 செல்லவேண்டும்.நன்றி தெரிவிக்க செல்லும் பொழுது மக்கள் சொல்லும் குறை களை கேட்டு 
தக்க நடவடிக்கை எடுக்கும் படி அம்மா கூறியுள்ளார் .  அதே போல் வெற்றி வாய்ப்பை இழந்தவர்களும் தங்கள் போட்டியிட்ட தொகுதிக்கு சென்று
மக்களிடம் நன்றி  தெரிவிக்க வேண்டும்.மக்கள்  அதிமுகவின் மீது மாபெரும் நம்பிக்கை வைத்து 
மகத்தான வெற்றியை அளித்தமைக்கு அன்புடன் நன்றி  தெரிவிக்க வேண்டும் 
என்று அம்மா வேண்டுகோள் விடுத்துள்ளார் . 
 தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில சட்டசபை பொதுத்தேர்தலில், அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணிக்கு மக்கள் தங்கள் ஓட்டுக்களை அளித்து பேராதரவு வழங்கியுள்ளனர். மக்கள் பேராதரவுடன் ஆட்சி அமைத்துள்ள அ.தி.மு.க., அரசு, தமிழக மக்கள் பாதுகாப்புடன் நிம்மதியாக வாழ்வதற்குத் தேவையான அனைத்துப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் முனைப்புடன் மேற்கொண்டு வருகிறது. அ.தி.மு.க., சார்பில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.,க்களும், வெற்றி வாய்ப்பு இழந்த வேட்பாளர்களும், அவரவர் தொகுதியைச் சேர்ந்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பணியில் ஈடுபட வேண்டும். மக்களுக்கு நன்றி தெரிவிக்கச் செல்லும் போது எந்தவித ஆடம்பரமும், படாடோபமும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நன்றி தெரிவிக்கும் பணி எளிமையாக நடைபெற வேண்டும். மேடைகள் அமைத்தோ, பொதுக்கூட்டங்கள் ஏற்பாடு செய்தோ நன்றி சொல்லும் பணியை மேற்கொள்ளாமல், சம்பந்தப்பட்ட தொகுதிக்கு உட்பட்ட கிராமம், நகரம், பேரூராட்சி, மாநகராட்சி வட்டம் உள்ளிட்ட அனைத்து இடங்களுக்கும் நேரடியாகச் சென்று மக்களை சந்தித்து, அ.தி.மு.க., மீது மாபெரும் நம்பிக்கை வைத்து, மகத்தான வெற்றியை அளித்தமைக்கு அன்புடன் நன்றி தெரிவிக்க வேண்டும்.


No comments:

Post a Comment