Pages

Monday, November 29, 2010

பூசணி திருடன்

நம்மில் பலர் சில நேரங்களில் முழு பூசணி காயை சோற்றில் மறைக்கிறான் என சொல்வதை கேட்டிருப்போம் ,ஆனால் அதற்கு அர்த்தம் என்ன என கேட்டால் சரியான பதில் சொல்ல மாட்டார்கள் . அதற்கு உண்மையான அர்த்தம் என்ன என்றால் .ஒரு கிராமத்தில் திருடன் ஒருவன் வாழ்ந்து வந்தான் ,அவன் அதிகமாக திருடுவது பூசணி காயை ,அவனை கிராம மக்கள் பூசணி திருடன் என்று தான் அழைப்பார்கள் .திருடனுக்கு பின்னர் அவனது தலை முறை அத்துணை பேருக்கும் இந்த பட்டம் தொடர்ந்தது .அவனது அடுத்த தலை முறை மிகுந்த செல்வந்தர்களாக வாழ்ந்தனர் ,இருப்பினும் பூசணி திருடன் வீடு என்று தான் அவர்களது வீட்டை மக்கள் சொல்லுவார்கள் .எப்படி இந்த பெயரை நீக்குவது என ஒரு பெரிய முனிவரிடம் ஆலோசனை கேட்டார்கள் ,அதற்கு அவர் உன் வீட்டு வாசல் முன் பெரிய பந்தல் போட்டு ஒரு வார காலத்திற்கு அன்னதானம் வழங்கு என ஆலோசனை கூறினார். அதன் படி தொடர்ந்து அன்னதானம் வழங்கினர் ,அதன் பின்னர் மக்கள் ஒரு வாரம் தொடர்ந்து சோறு போட்டங்களே அந்த வீடு என சொல்ல ஆரம்பித்தனர் ,இதுதான் முழு பூசணியை சோற்றில் மறைத்த கதை .

3 comments:

  1. இணைய பதிவுலகிற்கு இனிதே வரவேற்கின்றேன் :)

    ReplyDelete
  2. விளக்கம் அருமையாக இருந்தது, மிக்க நன்றி.

    ReplyDelete