எனது நண்பர் ஒருவருக்கு ஏற்பட்ட சுவையான அனுபவத்தின் ஒரு சில நகைச்சுவை பகுதிகளை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன் . தஞ்சாவூரில் வசித்துகொண்டிருக்கும் நமது நண்பர் ஆங்கிலம் கற்பிப்பதில் மிகுந்த புலமை மிக்கவர் , சரளமாக ஆங்கிலம் பேசக்குடியவர் ,மேலும் நண்பர் மக்கள் பணியில் மிகுந்த அக்கறை மிக்கவர். குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால் அடிக்கடி பொது நிகழ்சிகளில் தலைமை ஏற்கக் குடியவர் . பண்புள்ளம் கொண்டவர்.நண்பர்
நல்ல உயரம் அதேபோல் கொஞ்சம் குண்டானவர் ( தொப்பை) உள்ளவர் .நண்பருக்கு சின்ன கெட்ட பழக்கம் உண்டு. 5
நிமிடம் தனிமையிலோ அல்லது யாருடனும் பேசாமல் இருந்தால் உடனே
உட்கார்ந்தபடியே தூங்கிவிடுவார்.
நண்பருக்கு திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஆங்கில பள்ளி ஆண்டு விழாவிற்கு தலைமை ஏற்க அழைப்பு வந்தது. பள்ளியின் தாளாளர் யாரேன்று கேட்டால் காவல் துறையில் dsp
ஆக இருந்து ஓய்வு பெற்றவர் . நண்பரும் அழைப்பை ஏற்று தனது நண்பரை அழைத்துக்கொண்டு திருச்சிக்கு பயணம் செய்தார் தனது பைக்கில் .நண்பர் சிறப்பு விருந்தினர் என்பதால் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை அணிந்து சென்றார் .( புது மாப்பிள்ளை போல் )
கீரனூர் வந்ததும் ஹோட்டல் இல் எதாவது சாப்பிடுவோம் என இருவரும் பைக் ஐ நிப்பாட்டி சாப்பிட்டனர் . சாப்பிட்ட பின் வெற்றிலை பாக்கு போடுவோம் என நண்பரும் அவருடைய சக நண்பரும் முடிவு செய்தனர். வெற்றிலை மற்றும் பான்பராக்கும் சேர்த்து வாங்கியவர் வெற்றிலையின் பின்னால்
சுண்ணாம்பையும் தடவி வைத்தார் .
பான்பராக் உடன் வெற்றிலை போட்டால் சுண்ணாம்பு தேவை இல்லை .கூடுதலாக சுண்ணாம்பு தடவினால் வாய் வெந்து விடும் நண்பரோ இது தெரியாமல் பான்பராக் உடன் தேவைக்கு அதிகமான சுண்ணாம்பையும் தடவி வாயில் தள்ளி சுவைக்க இரண்டு நிமிடம் தான் தாமதம் வாயெல்லாம் உரைக்க . உடன் வந்த நண்பரிடம் வாய் எல்லாம்
உரைக்குதே என்று கத்த சிக்கிரம் துப்புங்க தலைவரே வாயை கழுவலாம் என சொல்ல நண்பர் வாயில் உள்ள வெற்றிலை பாக்கை இத் த்து என துப்ப நண்பருக்கு தொப்பை இருப்பதால் குனிந்து துப்ப வேண்டும் மாறாக நின்றபடியே துப்ப வெள்ளை வேட்டி சட்டை எல்லாம் ரத்தகரை போல் ஆகிவிட்டது . இப்படி இந்த கோலத்துடன் நண்பர் திருச்சி
சென்று பள்ளி நிகழ்ச்சியில் தலைமை ஏற்க முடியுமா ?
சட்டையை கழுவி விடலாம் என்றால் சனியன் பிடித்த கரை விட மாட்டேன்
என்கிறது .
வேண்டாம் விடுப்பா திருச்சி போனதும் புது சட்டை வாங்கி கொள்வோம் என இருவரும் திருச்சி
நோக்கி பைக் ல் புறப்பட்டனர்.
திருச்சி போனதும் புதிய வேட்டி ஒன்றும், சட்டை இருப்பதிலே பெரிய சைஸ் எதுவோ அதை தேடி கண்டு பிடித்து சட்டையை கடையில் போட்டு பார்க்காமல் நண்பர் வாங்கினார்.
உடன் வந்த நண்பர் ஊருக்குள்ள கொஞ்சம் அவுட்டர் போயி மூஞ்சி முகம் எல்லாம் கழுவலாம் 10 தண்ணீர் பாக்கெட் சோப்பும் வாங்கு என நண்பரிடம் சொல்ல அதே போல் நண்பரும்
வாங்க .நல்ல ஒதுக்கு புறமான இடமாக பார்த்து நிப்பாட்டி .மூஞ்சி முகம் எல்லாம் கழுவி புதிய வேட்டியை எடுத்து கட்டி பின்னர் .
கரை பட்ட சட்டையை கோபமாக அருகில் இருந்த முள்ளில் வீசி அதன் பின்னர்
கையில் இருந்த புது சட்டையை எடுத்து மாட்ட முயற்சி செய்தார், சட்டையில் உள்ள முதல் மூன்று பட்டன்
முடியவில்லை எனேன்றால் நண்பருக்கு தொப்பை இருப்பதால் மாட்ட முடியவில்லை, உடன் வந்த சக நண்பரிடம் நண்பா முச்சை இழுத்து பிடித்து கொள்கிறேன் எப்புடி யாவது பட்டன் ஐ போட்டு விட்டுடு என கெஞ்ச உடன் வந்த நண்பரும் எப்புடியாவது பட்டன் மாட்டிவிடலாம்
என முயற்சி செய்ய எவ்வளவோ முயற்சி செய்தும் சட்டையை போட
முடியாமல் திணறி .போடமுடியாது என கூறி அசந்து விட்டார்.
தலைவரே பேசாமல் அந்த சட்டையை சோப்பு போட்டு துவைத்து விடலாம் என இருவரும் முயற்சி செய்ய , அருகில் இருந்த வீட்டில்
நிலைமையை விளக்கி . முள்ளில் வேண்டாம் என வீசிய சட்டையை எடுத்து துவைத்து சட்டையை இரமாக இருக்கும் பொழுதே சட்டையை
மாற்றி தான் தலைமை தாங்க வேண்டிய பள்ளியை நோக்கி பைக் புறப்பட்டது .
பள்ளிக்கு சென்ற நண்பருக்கு அமோக வரவேற்பு , ஆனால் நண்பருக்கு சட்டை இரமாக இருப்பதால் un easy
யாக இருப்பதாக உணர்வு. நண்பர் சென்று பதினைந்து நிமிடத்தில் முதல் பாடல் ஆரம்பம் ஆனது
கண் அயர்ந்து விட்டார்.
மேடையில் ஏதோ ஒரு பெண் நாட்டியம் ஆட சிறப்பு விருத்தினர் ஆக
வந்த நமது நண்பரோ குறட்டை விட்டு தூங்க, பள்ளியின் தாளார் சங்கடப்பட நண்பருடன் வந்த மற்றொரு நண்பர் நிலைமையை புரிந்து தலைவரே எழுந்திரிங்க வாங்க கொஞ்சம் நடப்போம் என கூப்பிட,
பாத் ரூம் செல்வது போல் பாசாங்கு காட்டி கண் இமைக்கும் நேரத்தில்
இருவரும் பைக்கில் புறப்பட்டு பள்ளி வளாகத்தை விட்டு வெளியில் செல்ல ,அங்கு புறப்பட்ட வண்டி திருச்சி ஏர்போர்ட் இல் தான் நின்றது ,