Pages

Monday, March 25, 2013

வரதட்சணை எதற்கடா


கல்யாண  சந்தையிலே ........கன்னியரும்                                  
கண்ணிரு சிந்தையிலே 
தட்சணை எதற்கடா  -வரதட்சணை எதற்கடா


                                                                                                            
ஓகோ .............ராமர்களே !                                                                                                
ஜானகி ராமர்களே !
ஜானகியை மணப்பதற்கு 
ஜனகன் இரும்பு பெட்டி 
உங்களுக்கு எதற்கு .....?




கரும்பு தின்னக் கூலிகேட்கும்                                                                      
இரும்பு மனம் படைத்தோரே 
அரும்பி  நிற்கும் முல்லையவள் 
விரும்பி நீயும் மணப்பதற்கு 
தட்சணை எதற்கடா -வர 
தட்சணை எதற்காடா 



மாமியார் தரும் பணத்தில்                                                                                                                                                                       
மாமாங்கம் வாழ்பரே !
சாமியார் வாழ்க்கையல்ல - இது 
சம்சார வாழ்க்கையடா !
பிறதட்சனையைப் பெறத்தானோ 
பெற்றெடுத்திர் பிள்ளைகளை -ஆன் பிள்ளைகளை !


வரதட்சனை கொடுத்து தானோ 
வார் குழலான் வரவேண்டும்  மடி மீது !
வரும் தட்சணை  வாங்கித் தானோ -உங்கள்
வறுமையதை ஓட்டனுமோ !
பிரதட்சணை பெறத்தானோ 
பெற்றெடுத்திர் பிள்ளைகளை -ஆன் பிள்ளைகளை !
பெரும் பிச்சை என்றே தெரியாதோ !

கடை தெருவே சென்றாலும் -ஆசையில் 
கடைப் பொருளை வாங்கினாலும் -காசதை 
நாம் தானே கொடுக்கின்றோம் 
இல்லை கடைகாரரிடம் 
பொருளையுமே வாங்கிவிட்டு 
காசையும் கேட்கின்றோம் 
இல்லை கடைகாரரிடம் 
பொருளையுமே வாங்கி விட்டு 
காசையும் கேட்கின்றோமே?-நாம் 
காசையும் கேட்கின்றோமே?-
இல்லை ... இல்லை ....இல்லையே !
நாம் தானே கொடுக்கின்றோம் -காசு 
நாம்தானே கொடுக்கின்றோம் 



வாழ்க்கை துவங்க 
வரதட்சனை கேட்பவன் 
வாழும் நாட்டின் அகதி ஆவான் 
மிதவாதி காந்தி கூட  -கருத்தில் 
தீவிரவாதி ஆகிச் சொன்னான் இதையே !

வரதட்சனை வரதட்சனை -பெண்ணைப்
பெற்றவர் வீட்டில்
வறுமை  கொடி  நாட்ட
வந்ததுதான் வரதட்சனை


வரதட்சனை  நடைமுறை
வழக்கிலே தப்பென்றால்
கொடுப்பவரை யாரும் கண்டிக்கவுமில்லை !
கொள்பவரை யாரும்  தண்டிக்கவுமில்லை 



பின் என்ன
பின் தொடரத்தான்  செய்யும்
பெண்சிசுக்கொலை என்பதும் !

இந்நிலை தொடர்ந்தால் -இனி
வருன்காலத்தே
வனிதை யெனும் மனமகளால்
இறக்குமதி சரக்காவாள்


பன்னாட்டு இறக்குமதியில்
பாவை மயிலாவாள்
பைசா கொடுத்தா -ஆடவனை
மணக்க வருவாள்
கன்னாளான் காசு கொடுத்தே
கல்யாணம் செய்தாலும்
எந்நாளும் இயல்பாய்
 இருந்திடவா போகிறாள் ?

வேசம்தான் போடுவாள் வெளிநாட்டுக்காரி -அவள்
பாசம் படுவாளா  -இல்லை
நேசம் தான்  தேடுவாளா ?

ஐயகோ பரிதாபம்
அது இல்லை வெகு தூரம்
நடக்கப்போகிறது நாட்டில் -ஆண்
நயவஞ்சகக் காட்டில்.............................................................................

2 comments: