' உன்னை அறிந்தால்-நீ
உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்'
என்ற கவியரசு கண்ணதாசனின் கவிதை வரிகளை
நினைவு கூறும் வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அகில
இந்திய அண்ணாதிராவிட முன்னேற்ற கழகத்தின் ஆற்றல் மிகு
மாவட்டக்கழக செயலாளர் ஆக திறம்பட செயல்பட்டுக்கொண்டிருக்கும்
அருமை சகோதரர் டாக்டர் சி .விஜயபாஸ்கர் அவர்களின் கழக பணிகளை உங்கள் மத்தியில் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன் .
"சுறுசுறுப்பான உழைப்பே வெற்றிக்குச் சாவி"
இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களின் ஆணைக்கினங்க
புதுக்கோட்டை மாவட்டத்தில் ,மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பாக 4.8.2013 அன்று திருமிகு. வைகை செல்வன் அவர்கள் தலைமையில், அமைச்சர் திருமிகு ந.சுப்பிரமணியன் மற்றும் திரு.வீ.ஆர்.கார்த்திக்தொண்டைமான் அவர்கள் முன்னிலையில் , பொது கூட்டம் டவுன் ஹால் இல் நடைபெற்றது .
மிகுந்த திட்டமிடல் அடிப்படையில் இந்த பொதுக்கூட்டம் நடை பெற்றிருக்க வேண்டும் . அத்துணை பெரிய மக்கள் கூட்டத்தை கூட்டுவது என்பதும் அவர்களை வழிநடத்துவது என்பதும் சாதாரண காரியம்
இல்லை என்று தான் சொல்லவேண்டும் ,
நான் எவ்வளவோ பெரிய அரசியல் பொது கூட்டங்களை எனது வாழ்நாளில் பார்த்திருக்கிறேன் ,ஆனால் இங்கு பெரிய விந்தை
என்னவென்றால் நடப்பது பாசறை கூட்டம் , கண்டிப்பாக பாசறை இளைஞர்கள் மற்றும்பாசறை இளம் பெண்கள் அதிகப்படியாக கலந்து கொள்ள வேண்டும் .
இளைஞர்களை திரட்டுவது என்பது சாதாரண காரியம் இல்லை அதிலும்
இளம் பெண்களை திரட்டுவது யாரும் செய்ய முடியாத செயலாகும் .
மிக அதிக அளவில் இளம் பெண்களையும் ,அதற்கு சமமாக இளைஞர்களை யும் ,மற்றும் அதிகப்படியான கழக நிர்வாகிகளையும் திரட்டி யாரும் செய்ய இயலாத செயற்கரிய செயலை செய்திருந்தது வியப்பான மற்றும் கழகத்திற்கு பெருமை சேர்க்கக் கூடிய செயலாகும் .
"எதையும் என்னால் செய்ய இயலும்" என அனைவரும் போற்றி
புகழக் கூடிய வகையில் மாபெரும் மக்கள் கூட்டத்தை திரட்டி மிக சிறப்பாக செயல் படுத்திய ஆற்றல் மிகு மாவட்டகழக செயலாளர் அண்ணன் திரு சி .விஜயபாஸ்கர் அவர்களையும் அவருக்கு உறுதுணையாகவும்
செயல் வீரராக செயல் பட்ட அருமை சகோதரர் பாசறை மாவட்டக் கழக செயலாளர் ரா.ராஜசேகரன் அவர்களையும், நகரகழக செயலாளர் அண்ணன் க.பாஸ்கர் அவர்களையும் மனதார பாராட்டியே ஆக வேண்டும்.
டாக்டர் திரு சி .விஜய பாஸ்கர் அவர்களை போன்று ஓர் ஆயிரம் விஜய பாஸ்கர் இந்த பாரத தேசத்திற்கு வரவேண்டும் , அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பெருமையை நிலைநாட்டிட ! ஜெய் ஹிந்த்
No comments:
Post a Comment