Pages

Saturday, June 18, 2011

வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க அம்மா திருச்சி விஜயம்


 தேர்தலுக்கு பிறகு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக இன்று காலை 8 மணிக்கு, விமானம் மூலம் திருச்சிக்கு வரும் தமிழக முதல்வர் மாண்புமிகு அம்மா , மாலை ஸ்ரீரங்கத்தில் நடக்கும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்தில், "என் பூர்வீகம் ஸ்ரீரங்கம் தான். எனவே, நான் இங்கு அடிக்கடி வருவேன்' என்று பேசி, அ.தி.மு.க., பொதுச் செயலாளர்
 புரட்சி தலைவி அம்மா வாக்கு  சேகரித்தார்.
தேர்தலில் 41 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று  முதல்வராக பொறுப்பேற்றார். முதல்வரான பிறகு, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கவும், ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை தரிசிக்கவும் 19ம் தேதி  முதல்வர்  திருச்சி வருகிறார் . அதன்படி, தமிழக முதல்வர் , விமானம் மூலம் இன்று காலை 8 மணிக்கு, திருச்சி வருகிறார். வரவேற்பு முடிந்ததும் முதல்வர் , சங்கம் ஓட்டலில் ஓய்வெடுக்கிறார்.

மாலை 5 மணியளவில், ஸ்ரீரங்கம் மேல சித்திரை வீதியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று, தோட்டக்கலைத் துறை சார்பில், திருச்சியில் கட்டப்பட உள்ள தோட்டக்கலை கல்லூரி உட்பட, 306 கோடி ரூபாய் மதிப்பிலான, 38 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். 430 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
நாளை மாலை, ஸ்ரீரங்கம் தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார். 21ம் தேதி மாலை, விமானம் மூலம் சென்னை புறப்படுகிறார். முதல்வர் நிகழ்ச்சி என்பதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உங்களின் மேலான கருத்துகளை இங்கு பதிவு செய்யலாமே .

Thursday, June 9, 2011

நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே !

எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே ,அது நல்லவன் ஆவதும் கெட்டவன் ஆவதும் அன்னை வளர்ப்பிலே.இந்த பாடலின் வரிகள் மிகவும் அர்த்தமானது.   .  நான் ஆசிரியர் 
பயிற்சி நிறுவனத்தில் படிக்கும் 
 பொழுது, teaching practice க்காக ஒரு கிராமத்தில் உள்ள பள்ளிக்கு சென்றேன் . அங்கு நான் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு  ஆங்கில பாடம் எடுத்தேன். 
அத்துணை மாணவரும் பாடம் எடுப்பதை கவனிக்க ஒரே ஒரு மாணவன் மட்டும் 
வகுப்பறையின் கரும்பலகையை நோக்காமல் பாட புத்தகத்தை கையில் 
எடுக்காமல் அலட்சியமாக அமர்ந்து இருந்தான்.வகுப்பு நேரம் முடிந்ததும் 
அந்த மாணவனைஅருகே  அழைத்தேன் .காலையில் என்ன தம்பி சாப்புட்டியா
என்றேன் ,அந்த மாணவனின் கண்கள் கலங்கியது  என்ன தம்பி ஏன் அழுகிற என்றேன் மிகவும் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தான். என்ன தம்பி சாப்புடலையா என்றேன் ?  ஆம் என்று தலை ஆட்டினான் ...........
ஏன் சாப்பிட வில்லை ,என்றன். ஸ்கூல் க்கு புறப்படும் பொழுது ,அப்பாவுக்கும் 
அம்மாவுக்கும் சண்டை என்றான் .பாவம் பெற்றோரின் சண்டை அவன் மனதை
பாதித்தது . ஒரு குழந்தை நல்ல ஒழுக்கத்துடன் இருப்பது என்பது  அவனுடைய
 சுற்று சுழலை பொறுத்தது .     குழந்தை பெற்றால் மட்டும் போதாது ,அவர்களின் 
எதிர்கால நலன் கருதி பொறுப்பாக வளர்த்து ஆளாக்க பாடு படவேண்டும் . 

Wednesday, June 1, 2011

அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்

  அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்த பொழுது எடுத்த புகை படம்( 2001  ஆம் வருடம்) அருகில் அன்றைய  மாவட்ட செயலாளர் மற்றும் நகர செயலாளர்
 2010  ஆம் வருடம் நடை பெற்ற பொது கூட்டத்தில் வரவேற்புரை

 மாணவர்களுக்கு அம்மா பிறந்த தினத்தன்று நோட் புக் வழங்கும் நிகழ்ச்சி.

 63 வது அம்மா பிறந்த தினத்தன்று நோட் புக் வழங்கும் நிகழ்ச்சி
 2010  ஆம் வருடம் 62 வது   அம்மா பிறந்த தினத்தன்று கொடியேற்றம்

சொன்னதை செய்த மாண்புமிகு அம்மா

சொன்னதை செய்த மாண்புமிகு அம்மா

தமிழ்நாட்டில் மொத்தம் 1 கோடியே 95 லட்சம் குடு‌ம்ப அ‌ட்டைக‌ள் உள்ளன. இதில் அரிசி பெற தகுதி உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு 
குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் மாதம்முதல் 20 கிலோ வரை அரிசி வழங்கப்படுகிறது.


இதுபோல அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் 35 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. இந்த குடும்ப அட்டைகளுக்கு இன்று  முதல் இலவச அரிசி  மாண்புமிகு  முதலமைச்சர் 
அவர்கள் வழங்குகிறார்கள்.


‌நியாய‌விலை கடைக‌ளி‌ல் இலவச அரிசி வழங்கும் திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர்  இன்று  காலை 10 மணிக்கு சென்னை  ஸ்ரீராம் நகரில் உள்ள ‌நியாய‌விலை கடையில் தொடங்கி வைக்கிறார்.